வெறும் 5 நிமிடத்தில் ஓட்ஸ் கட்லட் : எப்படி செய்யலாம்?
ஓட்ஸ் கட்லெட்டுகள் ஆரோக்கியமான மற்றும் சுவைக்கூடிய உணவாகும். இந்த சுவையான வெறும் 30 நிமிடங்களில் தயார் செய்திடலாம்.
வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு உணவை செய்து வழங்க வேண்டும் என்று நினைத்தால் ஓட்ஸ் வைத்து கட்லட் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 1 கப்
உருளைக்கிழங்கு – 2 வேகவைத்தது
பட்டாணி – 1/4 கப் வேகவைத்தது
கடலை பருப்பு – 1/4 கப் வேகவைத்தது
வெங்காயம் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
கொத்தமல்லி இலை மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
ஆம்சூர் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை
கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
கடலை பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை குக்கரில் சமைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கடலை பருப்பை சேர்க்கவும்.
பின்பு வெங்காயம், குடைமிளகாய், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
பானில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கையில் எண்ணெய் தடவி கட்லெட் கலவையை எடுத்து தட்டி பானில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறத்தில் பொரித்து எடுத்தால் சுவையான ஓட்ஸ் கட்லெட் தயார்.