உலகளவில் 100 கோடியை தாண்டிய உடல் பருமன் பாதிப்பு – ஆய்வில் வெளியான உண்மை
உலகளவில் உடல் பருமனால் வாழும் மனிதர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
100 கோடியை தாண்டிய பாதிப்பு
உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் பருமன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது 100 கோடியை தாண்டியுள்ளதாக தி லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெரியவர்களில் உடல் பருமன் விகிதம் பெண்களில் இருமடங்காகவும், ஆண்களில் மூன்று மடங்காகவும் காணப்படுகிறது.
கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் அதிகரித்து காணப்படுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எடை குறைந்த பெண் குழந்தைகளின் விகிதம் 1990ல் 10.3 சதவீதத்தில் இருந்து 2022ல் 8.2 சதவீதமாகவும், ஆண் குழந்தைகளில் 16.7 சதவீதத்தில் இருந்து 10.8 சதவீதமாக உள்ளது.
மேலும் 1990 முதல் 2022 வரையில் உடல் பருமன் விகிதத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இது உலகம் முழுவதிலும் 190 நாடுகளில் சுமார் 1500 ஆய்வாளர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.