பழங்கள் சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்… இல்லனா நல்லத விட கெட்டதுதான் அதிகமாகும்…!
பழங்கள் உங்கள் உணவின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். இது உங்களுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நீரேற்றம் ஆகியவற்றை வழங்குகிறது.
உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க வழக்கமாக பழங்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
பழங்கள் ஆரோக்கியமானவை என்பது உண்மைதான், ஆனால் மற்ற உணவுகளைப் போலவே, பழங்களை சாப்பிடுவதற்கும் சில விதிகள் உள்ளன. பழங்களில் இருந்து முழுமையான நன்மைகளைப் பெறுவதற்கு அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எப்போதும் ப்ரெஷான பழங்களை சாப்பிட வேண்டும்
பழங்கள் எப்போதும் ப்ரெஷாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழைய அல்லது கெட்டுப்போன பழங்களை உண்பதால் நீங்கள் நோய்வைடப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும், பழங்கள் புதியதாக இருக்கும்போது மட்டுமே மிகவும் சத்தானவையாக இருக்கிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள்
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, நீங்கள் பழங்களை சாப்பிட்டால் ஆரோக்கியமான பொருட்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். பாதாம் போன்ற ஊறவைத்த சில நட்ஸ்களை சாப்பிடுவது உங்களுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்க முடியும்.
பருவகால பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்
பருவகால பழங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்றும், நீண்ட காலமாகப் பாதுகாக்கப்படும் பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் நீண்ட காலத்திற்கு சேமிக்கப்படும் போது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கின்றன, எனவே புதிய மற்றும் பருவகாலங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.