கஷ்டத்தைக் கொடுக்கும் கருப்பை நீர்க்கட்டி – எப்படி உருவாகிறது? சரி செய்வதற்கான வழி என்ன?
தற்போதைய காலத்தில் அதிகளவு பெண்கள் நீர்கட்டியால் அவதிப்படுகிறார்கள். இதனால், குழந்தை தாமதம் மற்றும் மாதவிடாய் ஒழுங்கற்ற நிலையில் இருப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றது.
இது எப்படி தான் வருகிறது? அதனை எப்படி தான் குணமாக்குவது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
கருப்பை நீர் கட்டி எப்படி உருவாகிறது?
* கருப்பை நீர்க்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் கருமுட்டைகள் வெடித்து வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களையும் பாதிக்கலாம். அவரவர்களுக்கு ஏற்றவாறு சிகிச்சையளிக்க வேண்டும்.
* கர்ப்பப்பையில் ஹார்மோன் குறைபாடு காரணமாக மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை ஏற்படுகிறது.
நீர்கட்டியை சரி செய்வதற்கான வழி
நீர்கட்டியை சரிசெய்வதற்கு கழற்சிக்காய் ஒரு நல்ல தீர்வு. நாட்டு மருந்து கடைகளில் இந்தக் காய் கிடைக்கும். கழற்சிக்காய் என்பது சூடுக்கொட்டை. இதை உடைத்தால் உள்ளே பருப்பு இருக்கும்.
அந்தப் பருப்பை 4 மிளகுடன் சேர்த்து தினமும் காலையில் 48 நாட்கள் சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கான ஒழுங்கற்ற மாதவிடாய் சரியாகும். இதேபோல், கல்யாணி முருங்கை கீரையை வேகவைத்தோ அல்லது பொறியலாகவோ எடுத்துக்கொள்வது நீர்க்கட்டிக்கு நல்ல தீர்வாகும்.