இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப் போகுது… 15 வருஷங்களுக்கு பின் ராகு புதன் சேர்க்கை! என்னென்ன மாற்றங்கள் நிகழும்!
15 ஆண்டுகளுக்குப் பின் ராகு, புதன் சேர்க்கையால் உங்கள் துன்பங்கள் எல்லாம் பனி போல உருகி விலகப் போகிறது. இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கோங்க.
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு விதமான பலன்களை தருகிறார்கள். ராகு பகவான் அசுப கிரகமாக கருதப்படுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசியினருக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அதிலும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கும் ராகு பகவானால் பலருக்கும் அச்சமே. நவக்கிரகங்களில் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக இடம் மாறக்கூடியவர் ராகு பகவான் .
ஒரு ராசியில் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதி முதல் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் மீன ராசியிலேயே பயணம் செய்வார். நவக்கிரகங்களில் இளவரசனாக திகழ்பவர் புதன் பகவான். குழந்தைகளின் கல்வி, அறிவு, செல்வம், புத்திக்கூர்மை ஆகியவைகளுக்கு காரணியாக திகழ்பவர் புதன் பகவான் தான். மிக மிக குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றிக் கொள்ளக்கூடியவர் புதன் பகவான்.
அடுத்து வரக்கூடிய மார்ச் மாதத்தில் புதன் பகவான், மீன ராசியில் நுழைகின்றார். இதன் காரணமாக ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ இருக்கிறது. ராகுவும் புதனும் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய உள்ளனர். இதனால் 12 ராசிகளிலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடப் போகிறது.