அட என்ன ஒரு ருசி: செம்ம சுவையான காராமணி அடை இப்படி செய்யுங்க
இப்படி ஒரு முறை காராமணி அடை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
இட்லி புழுங்கல் அரிசி – ஒரு கப்
சிவப்பு காரமணி – அரை கப்
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 2
கறுப்பு முழு உளுந்து- ஒரு கப்
செய்முறை
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். காரா மணியையும், கறுப்பு முழு உளுந்தையும் தனியாக ஊற விடவும். ஊற வைத்த அரிசியுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். கறுப்பு உளுந்து, காராமணியை தனியாக அரைக்கவும்
அரைத்த இரண்டு மாவையும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை தட்டி இருபுறம் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். மொறுமொறு காராமணி அடை ரெடி.