சென்னை மெட்ரோவுக்கு ‘ஓஹோ’ ஆதரவு.. ஒரே நாளில் மெட்ரோவில் பயணித்த 3.65 லட்சம் பேர்! எப்போ தெரியுமா?

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 12ஆம் தேதி, ஒரே நாளில் மட்டும் 3.65 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி உள்ளனர்.

 

மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அலுவல் நேரங்களில் காலை மாலை என இருவேளைகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களைப் போல மக்கள் கூட்டத்துடன் காணப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 914 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 12.01.2024 அன்று 3,64,521 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 37,43,885 பயணிகள். ஆன்லைன், வாட்ஸ்அப், பயண அட்டைகள், பயணிகள் டோக்கன் முறையை பயன்படுத்தி 8,792 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9,02,336 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Paytm App on PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *