எண்ணெய் மணக்கும் சேனை புளிசு ரெசிபி : சுவையில் அசத்தும்
நல்ல காரசாரமான சேனை புளிசு ரெசிபியை செய்து பாருங்க. மிகவும் நன்றாக இருக்கும்
தேவையான பொருட்கள்
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் கடுகு
¾ டேபிள் ஸ்பூன் வெந்தயம்
20 பல் பூண்டு
1 துண்டு இஞ்சி துருவியது
20 சின்ன வெங்காயம்
¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி
3 பச்சை மிளகாய
1 கொத்து கருவேப்பிலை
3 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
250 கிராம் சேனை நறுக்கியது
உப்பு
2 டேபிள் ஸ்பூன் மல்லிப் பொடி
புளி கரைசல்
செய்முறை: ஒரு குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட வேண்டும். அதில் கடுகு, வெந்தயம் போடவும். தொடர்ந்து பூண்டு, இஞ்சி துருவியதை சேர்க்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ,1 கொத்து கருவேப்பிலை, மிளகாய் பொடி, சேர்க்கவும். தொடர்ந்து சேனை நறுக்கியது சேர்க்கவும். தொடர்ந்து உப்பு, மல்லிப் பொடி, புளி கரைசலை சேர்த்து நன்றாக கிளரவும். 6 நிமிடங்கள் மூடி வைக்கவும். தொடர்ந்து குக்கரை மூடி 3 விசில் விடவும். சூப்பரான சேனை புளிசு ரெடி.