Ola நிறுவனத்தின் ஹைப்பர் வீக் எண்ட் சலுகை.. என்னென்ன ஆஃபர் தெரியுமா?

2023 ஆம் ஆண்டு ஒரு சில நாட்களில் முடிவடைய இருப்பதால் பல ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களிடம் இருக்கக்கூடிய பழைய ஸ்டாக்குகளை புது வருடம் துவங்குவதற்கு முன்பாக விற்றுவிட வேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில் முன்னணி டூவீலர் உற்பத்தியாளரான ஓலா நிறுவனம் தங்களது பழைய ஸ்டாக்குகளை விற்பதற்கு புதுவிதமான யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன்படி ஓலா நிறுவனம் ஹைப்பர் வீக் எண்ட் என்ற ஆண்டு இறுதி சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சலுகையை பயன்படுத்தி இ-ஸ்கூட்டர் S1 சீரிஸை கஸ்டமர்கள் பெரிய அளவு டிஸ்கவுண்டுகளில் வாங்கிக் கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ வெளியீட்டில் நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், S1 X Plus டூவீலருக்கு 20 ஆயிரம் ரூபாய் ஃபிளாட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டூவீலரை வாங்குவதில் ஆர்வம் இருக்கக் கூடிய கஸ்டமர்கள் அதனை சலுகை விலையான 89,999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த விலை கிட்டத்தட்ட ஃப்யூவல் பவர்டு மாடல்களின் விலைகளுக்கு சமமாக இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு இறுதி டிஸ்கவுண்ட் ஆஃபரை பயன்படுத்துவதற்கு இன்றே கடைசி நாள்.

Ola நிறுவனத்தின் ஹைப்பர் வீகென்ட் சலுகை (Hyper Weekend Offer) :

ஹைப்பர் வீக் எண்டின் போது, கஸ்டமர்கள் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான கூடுதல் போனசை S1 Air & S1 Pro ஆகிய இரண்டு டூவீலர்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இதனை இன்னும் சிறப்பானதாக மாற்றி பல கஸ்டமர்களை கவர்வதன் பொருட்டு, Ola நிறுவனம் பல்வேறு முன்னணி வங்கிகளுடன் இணைந்து குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு யூசர்களுக்கு குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கி வருகிறது.

எளிமையான EMI ஆப்ஷன்கள் :

பல்வேறு விதமான இ-ஸ்கூட்டர்களுக்கு எளிமையான EMI ஆப்ஷன்களை தேர்வு செய்யக்கூடிய வசதியையும் கஸ்டமர்கள் பெறுகிறார்கள். இதில் இருக்கக்கூடிய சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த EMI ஆப்ஷனை பயன்படுத்துவதற்கு நீங்கள் எந்த விதமான டவுன் பேமெண்ட் தொகையையும் செலுத்த தேவையில்லை. அதோடு ப்ராசசிங் கட்டணம் கிடையாது. மேலும் இதற்கான வட்டி விகிதங்கள் 6.99 சதவீதம் என்ற குறைவான வட்டியில் வழங்கப்படுகிறது.

Ola SI லைன்அப் :

அதே நேரத்தில் நிறுவனம் அதன் ப்ராடக்டுகளை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற செய்வதோடு மட்டுமல்லாமல், ஆர்வம் இருக்கக் கூடிய நபர்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யக்கூடிய வகையில் பல்வேறு ஆப்ஷன்களையும் வழங்குகிறது. சமீபத்தில் இந்த பிராண்ட் அதன் லைனப்பை விரிவுப்படுத்தி, S1 குடும்பத்தில் ஐந்து ஸ்கூட்டர்களை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை உங்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்குவதற்கான எண்ணம் இருந்தால் இந்த சலவையை மறக்காமல் பயன்படுத்தி மகிழுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *