பழைய வரி விதிப்பு முறை: சிறந்த வரி சேமிப்பு திட்டங்களை செக் பண்ணுங்க
Tax Saving Investment | 2023-24 நிதியாண்டில் வரிச் சேமிப்பு முதலீடுகளைச் செய்யவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், மார்ச் 31 வரை இதைச் செய்யலாம்.
FY24 முடிவிற்குப் பிறகு செய்யப்படும் முதலீடுகள், FY24க்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, பழைய வரி முறையின் கீழ் விலக்குகளைப் பெறுவதற்குத் தகுதி பெறாது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரிகளைச் சேமிக்க சில வழிகள் உள்ளன.
தேசிய ஓய்வூதிய அமைப்பு
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) தனிநபர்களை ஓய்வூதியத்திற்காக சேமிக்க ஊக்குவிக்கிறது. NPSக்கு அளிக்கப்படும் பங்களிப்புகள் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்குகளுக்குத் தகுதிபெறும்.
இந்தத் திட்டம் பிரிவு 80 CCD (1B) இன் கீழ் 50,000 கூடுதல் வரி விலக்கையும் அனுமதிக்கிறது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
இது மும்மடங்கு வரிச் சலுகைகள் கொண்ட திட்டமாகும். பிரிவு 80C இன் கீழ் முதலீட்டின் போது கழித்தல், பெறப்படும் வட்டிக்கு வரி இல்லை.
PPF திட்டமானது மற்ற முதலீட்டு விருப்பங்களான பரஸ்பர நிதிகள், பங்குகள் அல்லது கார்ப்பரேட் பத்திரங்கள் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பான முதலீடாக இருக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அல்லது SCSS என்பது 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அரசாங்க திட்டமாகும்.
இந்தத் திட்டம் பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் முதலீட்டு விருப்பத்தை வழங்குகிறது, மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வு காலத்திலும் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது ஆண்டுக்கு 8.2% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது ஒரு பெண் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்ச வருடாந்திர வைப்பு வரம்பு ரூ. 1.5 லட்சம் மற்றும் குறைந்தபட்சத் தேவை ரூ. 250 ஆகும்.
காப்பீட்டு திட்டங்கள்
பெரும்பாலான காப்பீட்டு திடடங்களின் பிரிமீயம் வரி சேமிப்பின் கீழ் வருகிறது. இது பொதுவாக நீண்ட கால திட்டமாக கருதப்படுகிறது.