எக்கசக்கமான நன்மைகள் உள்ள “ஓமவள்ளி இலை” .. ஒரு முறை இந்த இலையை இப்படி பயன்படுத்தி தான் பாருங்களே!
மருத்துவ குணம்கள் கொண்ட பலவகையான செடிகள் உள்ளன. அவற்றில் ஒன்று அஜ்வைன் இலை. இது கற்பூரவல்லி, ஓமவல்லி என்றும் அழைக்கப்படும் அற்புதமான மருத்துவ பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மிக முக்கியமான மூலிகையாகும். கற்பூரவல்லி பாரம்பரியமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சளி மற்றும் இருமல் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது நரை முடி மற்றும் பொடுகு போன்ற முடி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், எடை இழப்புக்கு உதவுவதற்கும், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஆஸ்துமா மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பயன்படுகிறது.
விதைகளைப் போலவே, அஜ்வைன் இலைகளும் வாய்வு மற்றும் பிற வயிற்று உபாதைகள் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இதன் இலைகள் செரிமானத்தை மேம்படுத்துவதாகவும், குழந்தைகளில் பசியைத் தூண்டுவதாகவும் நம்பப்படுகிறது. குறிப்பாக சளி, இருமல் குணமாக இந்த இலையைக் கொண்டு கற்பூரவல்லி ரசம் மற்றும் சட்னி செய்கிறோம்.
கற்பூரவள்ளி இலையின் நன்மைகள்:
இந்த இலையிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நெற்றியில் பற்றுப்போட்ட்டால் ஜலதோஷம், தலைவலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்.
அதுபோல் நீங்கள் அதிகப்படியான கபம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த இலையை அரைத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இவற்றுடன், ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து தினமும் 2 வேளை குடிக்க வேண்டும். இதனை நீங்கள் மூன்று நாள் மட்டும் குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள். அதுமட்டுமின்றி, இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும் தெரியுமா.
கற்பூரவள்ளி மருந்து குழம்பு:
இந்த குழம்பு தயாரிக்க இந்த இலையை முதலில் நன்கு அலசி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா என அனைத்தையும் தனித்தனியாக வறுத்து, மிக்சியில் போட்டு பவுடராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே பாத்திரத்தில், சிறிதளவு எண்ணெய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி, ஆறிய பின் தண்ணீர்விட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இதனை அடுத்து, அந்த பாத்திரத்தில், கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் ஓமவள்ளி இலைகளை அதில் போட்டு வதக்க வேண்டும். இவற்றுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இவற்றோடு கலக்கவும், பிறகு நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இப்போது சுவையான கற்பூரவள்ளி மருந்து குழம்பு ரெடி. சளி, கபம், ஜூரம், தலைபாரம் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த குழம்பு சிறந்த தீர்வாகும்.