இனி எல்லாத்துக்குமே ஒரே ஆப்: இந்திய ரயில்வே சூப்பர் திட்டம்!

ரயில்களின் நிலை, டிக்கெட் முன்பதிவு என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தனித்தனி ஆப்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், ரயில்களின் இருப்பிடத்தை நேரடியாக கண்காணிப்பது, ரயில்களின் நிலை, டிக்கெட் முன்பதிவு, புகார் பதிவு மற்றும் பிற அம்சங்களை உள்ளடக்கிய சூப்பர் செயலி’யை இந்திய ரயில்வே உருவாக்கி வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் அந்தந்த ஆப் ஸ்டோர்கள் மூலம் இந்த அப்ளிகேஷனை பெற முடியும்.

பயணிகளின் வசதிக்காக, டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் செய்தல் மற்றும் விசாரணைகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி. ஆப், ரயில் சார்த்தி, இந்திய ரயில்வே PNR, தேசிய ரயில் விசாரணை அமைப்பு, Rail Madad, UTS, Food on Track போன்ற 10க்கும் மேற்பட்ட ஆப்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த அனைத்து செயலிகளையும் ஒருங்கிணைப்பதே இந்திய ரயில்வேயின் நோக்கமாகும்.

ரயில்வே தகவல் அமைப்பு மையத்தின் (CRIS) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்திய ரயில்வேயின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் மேலாண்மை (ஐடி) நிறுவனத்துக்கு ‘சூப்பர் செயலியை’ உருவாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *