ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் – எத்தனை சதவீதம் பேர் ஆதரவு தெரியுமா

நாட்டில் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 2023 செப்டம்பர் மாதம் அமைத்தது.

அதன் படி ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடந்த 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதிலும் இருந்து 20,972 பேர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அவர்களில், ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்துவதற்கு ஆதரவாக 81 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவிக்குமாறு 46 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுவரை17 கட்சிகள் பரிந்துரை அளித்துள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *