வெங்காய வியாபாரிகள் மகிழ்ச்சி : வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்..!
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் ஆனது வர்த்தக அமைச்சகத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கி வருகிறது. இது நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நட்பு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவு வெங்காய ஏற்றுமதியை அரசு அனுமதித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயத்தின் தேவையை பூர்த்தி செய்யவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் டிசம்பர் எட்டாம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அமைச்சரகமானது மார் 31 ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் ஆனது 64,400 டன் வெங்காயத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் பங்களாதேஷ்க்கு 50,000 டன் வெங்காயமும், ஐக்கிய அரபு எமிடரேட்ஸ்க்கு 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வெங்காய ஏற்றுமதியை அரசு அனுமதித்து உள்ளதால் வெங்காய வியாபாரிகள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.