இன்று ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி.. !

108 திவ்யதேசங்களில் பிரசித்திபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயில். ஆண்டின் எல்லா நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
பண்டிகை திருவிழா, விடுமுறை தினங்களில் சாமி தரிசனத்திற்காக மணிக்கணக்கில் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதும்வழக்கம் தான். சாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிக்க திருப்பதியில் இலவச சர்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த டோக்கன்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ம் தேதி வரையிலான டோக்கன்கள் 10 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டன. அத்துடன் இந்த டோக்கன்கள் மற்றும் ஆன்லைனில் வழங்கப்பட்ட ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதி எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று ஜனவரி 18ம் தேதி வியாழக்கிழமை ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஜனவரி 24 வரை நடைபெறும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு கட்டண சேவை டிக்கெட், தரிசன டிக்கெட்இவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது