உலகில் வெறும் 500 மட்டுமே பயன்படுத்தும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. எதுவென்று தெரியுமா?
உலகில் சில நாடுகளின் பாஸ்போர்ட்கள் சகிதிவாய்ந்ததாக கருதப்படுகின்றன. குறிப்பாக ஜப்பான் பாஸ்போர்ட் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்டாக கருதப்படுகிறது. ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 194 நாடுகளுக்கு பயணிக்கலாம்.
விசா இல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பது சுவாரஸ்யமாக இருந்தாலும் அதை விட சிறப்பானது தான் உலகின் முக்கிய பாஸ்போர்ட்டான மால்டாவின் இறையாண்மை ராணுவத்தின் உருப்பினர்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் ஆகும். சாவரின் மிலிட்டரி ஆர்டர் ஆஃப் மால்டா பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனக்கென தனி நாடு, சாலைகள் இல்லாவிட்டாலும் கார் ஓட்டுநர் உரிமம், ஸ்டாம்ப், நாணயம் என எல்லாவற்றையும் கொண்டுள்ளது.
ஆர்டர் ஆஃப் மால்டா பாஸ்போர்ட் முதன்முதலில் 1300-ல் வழங்கப்பட்டது. அதன் மூலம் தூதர்கள் வெளி நாடுகளுக்கு சென்று தங்கள் ஆவணங்களை சரிப்பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட்டுகளில் காணப்படும் அம்சங்களை உள்ளடக்கும் விதமாக மிகவும் வலிமையான பாஸ்ப்போர்டாக மாரியது. உலகில் வெறும் 500 பேர் மட்டுமே இந்த சக்திவாந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றன.
இயேசு கிருஸ்துவின் ரத்தத்தை பிரதிபளிக்கும் விதமாக உள்ள இந்த பாஸ்போர்ட், இறையாண்மை தூதரக உறுப்பினர்கள், அதன் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே உள்ளது. இந்த பாஸ்போர்டில் நிறுவனத்தின் பெயர் தங்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாஸ்போர்டை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அதாவது குறைந்தபட்சம் 100 ஆண்டுகள். ஏனெனில் இந்த இறையாண்மை தலைவர்கள், தங்கள் வாழ்நாளில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 85 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியும் உள்ளது.
44 பக்கங்கள் கொண்ட இந்த பாஸ்போர்டிற்கு பின்னாள், மால்டீஸ்-ன் சிலுவை அச்சடிக்கப்பட்டிருக்கும். புகைப்படங்களோ, வேறு ஏதேனும் உருவங்களோ அதில் குறிப்பிடப்பட்டிருக்காது.