கோல்டன் க்ளோப் விழாவில் விருதுகளை அள்ளும் ஓப்பன்ஹெய்மர்!
ஆஸ்கருக்கு அடுத்த படியாக அமெரிக்கர்களால் உயரிய விருதாகக் கருதப்படும் கோல்டன் க்ளப் விருதுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆஸ்கருக்கு முன்பே நடக்கும் இந்த நிகழ்வில் விருது பெறும் படங்களே பெரும்பாலும் ஆஸ்கரிலும் விருதுகளை தட்டி செல்லும்.
இந்நிலையில் இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிக விருதுகளைப் பெற்றுள்ளது.
சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் (சில்லியன் மர்பி), சிறந்த நடிகை (லிலி கிளாட்ஸ்டோன்), சிறந்த குணச்சித்திர நடிகர் (ராபர்ட் டௌனி ஜூனியர்) மற்றும் சிறந்த பின்னணி இசை (லுட்விக் யோரன்சன்) ஆகிய ஆறு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது.