ஓபிஎஸ், இ பி எஸ்; யாருக்கு முதல் சிறை? உதயநிதி பரபரப்பு பேச்சு
சென்னை மேற்கு மாவட்ட திமுகவினருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.
அவர் பொங்கல் பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ” எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ,.பன்னீர்செல்வம் இடையே யார் முதலில் சிறைக்கு செல்வது என்ற போட்டி உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ” மிச்ஜாம் புயல் நிவாரண நிதி உட்பட மத்திய அரசு ஒன்றும் வழங்கவில்லை; ஆனால் தமிழக அரசு ஒரே மாதத்தில் ரூ.8000 வரை வழங்கி உள்ளது.
முதலில் சிறைக்குள் செல்வது ஓபிஎஸ் என எடப்பாடி பழனிச்சாமியும், இபிஎஸ் என ஓ பன்னீர்செல்வம் மாறி மாறி கூறுகின்றனர். இருவருமே உள்ளே சென்றாள் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்.
முன்னாள் முதலமைச்சர்களான ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் பிரிந்து செயல்படும் நிலையில் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த ஓ பன்னீர்செல்வம், ” நான் உண்மையை கூறினால் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வார்” என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ” நான் உண்மையைச் சொன்னால் ஓ பன்னீர்செல்வம் தான் சிறைக்கு செல்வார்” எனக் கூறினார்.
இருவரின் பேச்சை விமர்சிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.