வெள்ளை முடியை கருப்பாக்கும் 4 இலைகள் கொண்ட ஆர்கானிக் ஹேர் டை..!
வெள்ளை முடியை கருப்பாக்கும் 4 இலைகள் கொண்ட ஆர்கானிக் ஹேர் டை..!
வெள்ளை முடி பிரச்சனை பெருகி வருகிறது.
வயத்தவர்களை கடந்து இளம் தலைமுறையினரை பதம் பார்த்து வரும் இந்த வெள்ளை முடி பாதிப்பை நிரந்தரமாக சரி செய்ய ஆர்கானிக் ஹேர் டை பயன்படுத்துங்கள்.
ஹேர் டை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்…
*ரணக்கள்ளி பொடி – 1 ஸ்பூன்
*செம்பருத்தி இலை – 1 ஸ்பூன்
*கற்பூரவல்லி இலை பொடி – 1 ஸ்பூன்
*அவுரி இலை பொடி – 2 ஸ்பூன்
ஹேர் டை தயாரிக்கும் முறை…
ரணக்கள்ளி, செம்பருத்தி இலை, கற்பூரவல்லி, அவுரி இலை தங்களுக்கு கிடைத்தால் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பொடியை வாங்கி பயன்படுத்துவதும்.
ஹேர் டை தயாரிக்க ஒரு கிண்ணம் எடுத்து அதில் 1 ஸ்பூன் ரணக்கள்ளி பொடி, 1 ஸ்பூன் செம்பருத்தி இலை பொடி, 1 ஸ்பூன் கற்பூரவல்லி இலை பொடி, 2 ஸ்பூன் அவுரி இலை பொடி சேர்த்து கலந்து விடவும்.
பிறகு அரை எலுமிச்சம் பழத்தின் சாற்றை சேர்த்து கலக்கவும். பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை 1 மணி நேரத்திற்கு ஊறவிட்டு பிறகு தலைக்கு உபயோகிக்கவும்.
ஹேர் டை உபயோகிக்கும் முறை…
இந்த ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்னர் தலையில் எண்ணெய் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி 1/2 மணி நேரத்திற்கு பின்னர் ஷாம்பு இல்லாமல் தலையை அலசிக் கொள்ளவும்.
மறுநாள் ஷாம்பு பயன்படுத்தி குளித்துக் கொள்ளவும். இவ்வாறு வாரம் 2 முறை செய்து வந்தால் தலை முடி நிரந்தர கருப்பாகும்.