OTT: ஓடிடியில் ஒதுங்கியும் ஒர்க்கவுட் ஆகல.. வெப்சீரிஸில் செல்ஃப் எடுக்காத டாப் 5 நடிகைகள்!
சென்னை: சினிமா பட வாய்ப்புகள் குறைந்து விட்டால் சீரியல் நடிகையாவது எல்லாம் அந்த காலம். இப்போதைக்கு நடிகைகள் ஓடிடி பக்கம் தான் ஓடி ஒதுங்கி விடுகின்றனர். ஆனால், எல்லா நடிகைகளும் தமன்னா போலவும் சமந்தா போலவும் ஓடிடியில் வெளியாகும் வெப்சீரிஸில் நடித்து ஷைன் ஆகவில்லை.
தியேட்டரில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில், தனியாகவே ஓடிடிக்காகவும் வெப்சீரிஸ்களில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் எல்லாம் தாராளம் காட்டி நடித்து வருகின்றனர்.
அப்படி ஓடிடி பக்கம் ஒதுங்கியும் பெரிதாக ஹிட் கொடுக்காத டாப் 5 பிரபல நடிகைகள் பற்றிய பட்டியலை இங்கே பார்க்கலாம் வாங்க..
காஜல் அகர்வால்: வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்து வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. ஹாரர் வெப்சீரிஸாக வெளியான அந்த ஓடிடி படைப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், ரசிகர்களை கொஞ்சம் கூட திருப்திப்படுத்தாமல் பெரிய பல்பு வாங்கியது. இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால் அந்த படம் கிடப்பில் கிடந்த நேரத்தில் அதற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், அந்த வெப்சீரிஸில் நடித்திருந்தார்.
ஹன்சிகா: காஜல் அகர்வாலை தொடர்ந்து ஹன்சிகாவுக்கும் ஓடிடியில் ஹிட் கிடைக்கவில்லை. மை3 எனும் ரோபோடிக் வெப்சீரிஸில் நடித்திருந்தார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராஜேஷ். எம் சிவகார்த்திகேயன், நயன்தாராவை வைத்து மிஸ்டர் லோக்கல் படத்தை இயக்கியதில் இருந்தே ஃபிளாப் இயக்குநராக மாறிவிட்டார். முகேன் ராவ், சாந்தனு, ஹன்சிகா, விஜே பார்வதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மை3 வெப்சீரிஸில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், படுதோல்வியை சந்தித்தது.
வரலட்சுமி சரத்குமார்: மேன்சன் 24 எனும் தெலுங்கு பேய் வெப்சீரிஸில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். சத்யராஜ் வரலட்சுமியின் அப்பாவாக அந்த வெப்சீரிஸில் நடித்திருந்தார். ஹாரர் வெப்சீரிஸாக உருவான அந்த வெப்சீரிஸில் பிந்து மாதவி உள்ளிட்ட பல நடிகைகளும் நடித்த நிலையில், விக்ரமாதித்யன் வேதாளம் கான்செப்ட்டில் உருவான பேய் வெப்சீரிஸ் படு சொதப்பலாக உருவாக்கப்பட்ட நிலையில், ஃபிளாப் ஆனது.
ஸ்ருதிஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான பெஸ்ட் செல்லர் ஓடிடி வெப்சீரிஸும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தொடர்ந்து படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் சொதப்பலை சந்தித்து வந்த ஸ்ருதிஹாசனுக்கு கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படம் தான் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், அந்த படமும் விமர்சன ரீதியாகவும் ஸ்ருதிஹாசன் நடிப்பு பெரிதாக ரசிகர்களை ஈர்க்காமல் சொதப்பியது குறிப்பிடத்தக்கது.
அக்ஷரா ஹாசன்: அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வெப்சீரிஸ் நடிகை அக்ஷரா ஹாசனுக்கு பெரிய ஃபிளாப் வெப்சீரிஸாக அமைந்தது. சினிமாவிலும் அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவே இல்லை. அதன் பின்னர் சினிமா வாய்ப்புகளும் இல்லாத நிலையில், இந்த வெப்சீரிஸும் அவருக்கு கை கொடுக்கவில்லை. விஜய் ஆண்டனி உடன் அவர் நடித்த அக்னிச் சிறகுகள் எப்போ ரிலீஸாகும் என்றே தெரியவில்லை.