சீனாவை போல ஆகபோகுது நம்ம சென்னை.. கட்டிடங்களுக்கு நடுவுல புகுந்து போக இருக்கும் சென்னை மெட்ரோ ரயில்கள்!
கட்டிடங்களுக்கு இடையில் ரயில்கள் புகுந்து பயணிப்பதை நாம் இதுவரை வெளிநாடுகளிலேயே பார்த்திருப்போம். முதல் முறையாக இந்தியாவிலும் இந்த மாதிரியான சேவை பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. அதுவும் நம்முடைய சென்னையில் இதுபோன்ற ரயில்களை நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.
கட்டிடங்களுக்கு இடையில் ரயில் புகந்து பயணிப்பதை நாம் இதுவரை வெளிநாடுகளிலேயே பார்த்திருப்போம். குறிப்பாக, சீனாவிலேயே இதுபோன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையில் அவை புகுந்து பயணிக்கும். இந்த மாதிரியான ஓர் நிகழ்வையே விரைவில் இந்தியாவிலும் நம்மால் காண முடியும்.
இதனை உருவாக்கும் பணியிலேயே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது களமிறங்கி இறுக்கின்றது. சென்னை மெட்ரோ நம்முடைய சென்னையிலும் இதுபோன்று மெட்ரோ ரயில்கள் கட்டிடங்களுக்கு இடையில் புகுந்து பயணிக்கும் என்று அறிவித்து இருக்கின்றது. சென்னையில் கட்டம் 2 மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னையில் சுமார் மூன்று பகுதிகளில் இதுபோன்று ரயில்கள் கட்டிடங்களுக்கு இடையில் பகுந்து பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக 12 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டடங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. ஒன்று திருமங்கலத்தில் இடம் பெறும் என்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது.
இந்த 12 அடுக்குமாடி கட்டிடங்களின் 3 தளத்திலேயே ரயில்கள் உள்ளே நுழைந்து பயணிக்க இருக்கின்றன. இந்த கட்டிடங்கள் எப்படி இருக்கும், ரயில்கள் எப்படி உள்ளே நுழைந்து பயணிக்கும் என்பது பற்றிய கான்செப்ட் படங்களையே தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டு இருக்கின்றது.