வெளிப்படையாக கூறிய கருத்து… சிக்கலில் இளவரசர் ஹரி
போதை மருந்து பழக்கம் தமக்கிருந்ததாக Spare நினைவுக் குறிப்பில் இளவரசர் ஹரி வெளிப்படையாக கூறியிருந்தது தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பெடரல் விதிகளின் அடிப்படையில்
அமெரிக்க விசா பெறுவது தொடர்பில் இளவரசர் ஹரி போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Heritage அறக்கட்டளையை சேர்ந்த சட்டத்தரணிகள் பலர், இளவரசர் ஹரியின் குடிபெயர்தல் தகுதி குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பெடரல் விதிகளின் அடிப்படையில் முன்பு போதை மருந்து பழக்கத்தில் இருந்த ஒருவர் அமெரிக்காவில் நுழைவதை தடுத்திருக்க வேண்டும் என்று Heritage அறக்கட்டளையை சேர்ந்த சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
மேலும், இளவரசர் ஹரியின் குடிவரவு ஆவணங்கள் அனைத்தும் பொதுமக்கள் நலன் கருதி பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் புகாரில் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
உண்மையாக இருக்க வேண்டும்
ஆனால் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் வாதிடுகையில், அந்த நூலானது இளவரசர் ஹரி சட்டவிரோத போதை மருந்தை உட்கொண்டதற்கான உறுதிமொழியோ ஆதாரமோ அல்ல என்று தெரிவித்துள்ளார்.
ஒரு நூலில் குறிப்பிடப்படும் கருத்தானது உண்மையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spare நினைவுக் குறிப்பில் இளவரசர் ஹரி குறிப்பிடுகையில், 17 வயதில் cocaine பயன்படுத்தியும் தமக்கு எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்றும், ஆனால் கஞ்சா பயன்பாடு தமக்கு உதவியதாக குறிப்பிட்டிருந்தார்.