காப்பி அடிப்பதில் சீன நிறுவனங்களையே ஓவர்டேக் செஞ்சுட்டாங்க.. வேகன்ஆர்-ரேஞ்ஜ் ரோவரை காப்பி அடிச்சுட்டாங்களா!!

பேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக வேகன்ஆர் (WagonR) இருக்கின்றது. மலிவு விலை, பராமரிப்பு செலவு குறைவு, நிறைய மைலேஜை வழங்கும் மற்றும் அதிக இட வசதிக் கொண்டது, இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்களின் பிரியமான கார் மாடலாக மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் இந்த தயாரிப்புக் காட்சியளிக்கின்றது.

நாட்டின் பெஸ்ட் செல்லிங் ஹேட்ச்பேக் ரக கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த காரின் உருவத்திலும், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் (Land Rover Range Rover) ஸ்டைலிலும் ஓர் புதிய காரையே வேறொரு கார் உற்பத்தி நிறுவனம் தயாரித்து இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது எந்த நிறுவனம்? வேகன்ஆர் மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த காரின் சிறப்புகள் என்ன? மற்றும் இந்த கார் தற்போது எங்கு விற்பனைக்கு வந்திருக்கின்றது? இது போன்ற சுவாரஷ்யமான தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பொதுவாக சீன கார் உற்பத்தி நிறுவனங்களே இதுபோன்று காப்பி அடித்து வாகனங்களை உருவாக்கும். அவ்வாறு, சீன நிறுவனங்கள் உருவாக்கிய கார் மாடல்கள் பல சீனாவிலும், உலக சந்தைகள் சிலவற்றிலும் விற்பனையில் உள்ளன. ஆனால், இப்போது வேகன்ஆர் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் லேண்ட் ரோவர் தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் மாடல் சீன நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டது அல்ல.

வங்காள தேசத்தைச் சேர்ந்த ஓர் கார் உற்பத்தி நிறுவனத்தினாலேயே இந்த காப்பி அடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. பால்கி மோட்டார்ஸ் (Palki Motors) எனும் நிறுவனமே அது ஆகும். இந்த கார் காப்பி அடித்து உருவாக்கப்பட்டு இருந்தாலும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

அது ஓர் குட்டியான எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். நான்கு கதவுகள் அது கொண்டிருக்கின்றது. வேகன்ஆர் காரை போலவே உயரமாகவும் அது காட்சியளிக்கின்றது. ஆகையால், இட வசதி இதில் மிக தாராளமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த கார் வங்கதேசத்தில் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக சந்தையைக் களம் காண இருக்கின்றது.

இந்த காரின் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கும் பெரும்பாலான பாகங்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அதானே, “சீனர்களின் பங்களிப்பு இல்லாமல் இப்படி செய்ய முடியாதே” என்றே இந்த செயல் நம்மை நினைக்கச் செய்திருக்கின்றது. முகப்பு பகுதி அப்படியே லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவரை பிரதிபலிக்கின்றது.

பக்கவாட்டு பகுதி வேகன்ஆரை பிரதிபலிக்கின்றது. இந்த காரில் ஐந்து பேர் வரை தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். ஆட்டோரிக்ஷா டிரைவர்களை மையப்படுத்தியே இந்த காரை பால்கி மோட்டார்ஸ் உற்பத்தி செய்யத் தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. ஆட்டோரிக்சாவிற்கு பதிலாக இந்த காரை வாங்கி அதிக லாபத்தையும், நல்ல சவாரி அனுபவத்தை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்காகவும் இருக்கின்றது.

இது பட்ஜெட் விலைக் கொண்ட கார் மாடலாகக் காட்சியளித்தாலும், சிறப்பம்சங்களை மிக அதிக அளவில் இந்த கார் தாங்கி இருக்கின்றது. அந்தவகையில், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பவர் விண்டோ, ஏசி, 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் இணைப்பு, பிரீமியம் தர ஸ்பீக்கர் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, டிஸ்க் பிரேக்கிங் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் ஒட்டுமொத்த எடையே 460 கிலோ மட்டுமே என கூறப்படுகின்றது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ ஆகும். இதுமட்டுமின்றி ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 150 கிமீ தூரம் வரை நம்மால் டிராவல் செய்துக் கொள்ள முடியும் என பால்கி மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 60 V 100 Ah பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 6-8 மணி நேரம் வரை தேவைப்படும். 3 kW எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. வங்கதேசத்திற்கு என்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கார் மாடல் இது ஆகும். ஆகையால், அந்த சந்தையில் மட்டுமே அது விற்பனைச் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *