வெறும் 16 வயதில் சொந்தமாக தொழில்… மலைக்க வைக்கும் வளர்ச்சி: நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு

அமெரிக்காவில் வசித்துவரும் Pranjali Awasthi என்பவர் தமது இளம் வயதிலேயே ரூ 100 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனத்திற்கு உரிமையாளராக உள்ளார்.

சொந்தமாக நிறுவனம்
Pranjali Awasthi-ன் குடும்பம் அவருக்கு 11 வயதானபோது அமெரிக்காவின் புளோரிடாவில் குடியேறியுள்ளது. 7 வயதிலேயே மென்பொருள் தொடர்பில் அறிவை வளர்த்துக்கொண்ட Pranjali Awasthi தமது 13ம் வயதில் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் இன்டர்ன்ஷிப்பை ஆரம்பித்தார்.

இந்த நிலையில் கடந்த 2022ல் வெறும் 16 வயதில் Delv. AI என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர், தற்போது 10 பேர்களுக்கு தமது நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் அளித்துள்ளார்.

சந்தை மதிப்பு ரூ 100 கோடி
2022 ஜனவரி மாதம் தமது நிறுவனத்தை தொடங்கியதாக கூறும் Pranjali Awasthi சில மாதங்களிலேயே ரூ 3.7 கோடி அளவுக்கு முதலீட்டை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது அவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 100 கோடி என்றே கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *