அதானி குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்கா!

இந்த நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி பூங்காவினை கட்டமைத்து வந்தது. இதன் பணிகள் நிறைவடைந்து தற்போது மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.புவி வெப்பமயமாதலை தடுக்கவும், அதிகளவிலான கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் மாற்று வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலகமே இத்தகைய மாற்று எரிசக்திகளை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் மின்சார உற்பத்தியில் சோலார் பேனல்களை பயன்படுத்தி சூரிய சக்தி ஆற்றலை கொண்டு மின்சாரம் தயாரிப்பது சிறந்த வழிமுறையாக பார்க்கப்படுகிறது.551 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்: இந்தியாவை பொறுத்துவரை அதானி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் கால்பதித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் சார்பாக குஜராத் மாநிலம் காவ்டாவில் 551 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி பூங்கா நிறுவப்பட்டுள்ளது. இதில் வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கப்பட்டு தேசிய தொகுப்புக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 மாதங்களில் தயாரான சோலார் பூங்கா: குஜராத் கச் பகுதியின் சவாலான நிலப்பரப்பில் அடிப்படை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி, சாலைகள் அமைத்து, மின் உற்பத்திக்கான பேனல்களை நிறுவி மின் உற்பத்தி மற்றும் மனிதர்கள் வேலை செய்வதற்கான சூழல்களை 12 மாதங்களுக்குள் உருவாக்கி வெற்றி அடைந்திருப்பதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா இது என அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.கரூர் சிவசாமி..