இயற்கை முறையில் வெள்ளையாக மாற உதவும் Pack: அரிசி ஒன்னு போதும் ஈசியா தயாரிக்கலாம்
இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் இந்த ஒரு pack போதும்.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த பேக்கை பயன்படுத்தி வர உடல் மற்றும் முகம் வெள்ளையாகவும் , பொலிவாகவும் இருக்க உதவுகின்றன.
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 5 ஸ்பூன்
தயிர்- 2 ஸ்பூன்
பால்- 3 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் பச்சரிசியை நன்கு 2- 3 முறை கழுவி சுத்தம் செய்து பின் 5 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி மற்றும் அரிசி ஊறிய தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அந்த தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வடிகட்டிய அரிசி துகளை மீண்டும் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
அடுத்து வடிகட்டிய நீரை ஒரு வாணலில் சேர்த்து கைவிடாமல் கிளறவும். வெந்து நன்கு பேஸ்ட் போல் வந்ததும் அடுப்பை அனைத்து ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து இந்த கலவையில் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அவ்வப்போது சிறிது சிறிது பால் சேர்த்து மென்மையான பேஸ்ட் போல் வரும்வரை கலந்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை
இந்த கலவையை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு உடல் முழுக்க நன்கு தேய்த்து பின் குளித்து வரலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர கருமை நீங்கி வெள்ளையாக பெரிதளவில் உதவுகின்றன.
மேலும் தோல் மென்மையாகவும், கரும்புள்ளிகளை அகற்றவும் இந்த கலவை உதவுகின்றன.
இந்த பேஸ்டை பயன்படுத்தும் பொழுது அவ்வப்போது தயாரித்து கொள்வதால் இதன் பலன்கள் அப்படியே கிடைக்கும்.