நெல்லை ஸ்பெஷல் சொதிக் குழம்பு: மிஸ் பண்ணாம செய்து பாருங்க
திருநெல்வேலி சொதிக் குழம்பு, இப்படி செய்யுங்க. அம்புட்டு ருசியா இருக்கும்.
தேவையான பொருட்கள்
3 கப் தேங்காய் பால் ( 2, 3வது பால் )
240 எம்.எல் முதல் தேங்காய் பால்
100 கிராம் பாசி பருப்பு வேக வைத்தது
சின்ன வெங்காயம் 10
2 உருளைக்கிழங்கு
4 பீனஸ்
1 கேரட்
2 துண்டு இஞ்சி
4 பச்சை மிளகாய்
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய், இஞ்சி நறுக்கியது, பச்சை மிளகாய் நறுக்கியதை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், இதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ள வேணடும். தொடர்ந்து அதே பாத்திரத்தில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.,தொடர்ந்து இதில் அரைத்த பேஸ்டை சேர்க்கவும். தொடர்ந்து அவித்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸை சேர்க்கவும். காய்கறிகளை பாதி அளவில் வேக வைத்து சேர்க்கவும். தொடர்ந்து 2 வது 3 வது தேங்காய் பாலை சேர்த்து கிளரவும். நன்றாக இதில் காய்கறிகள் வேகும். தொடர்ந்து அவித்த பசி பருப்பை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து உப்பை சேர்த்து கிளரவும். தொடர்ந்து வேக வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து முதல் தேங்காய் பால் சேர்க்கவும். அதிக நேரம் வேக வைக்க வேண்டாம். ஒரு கொதி வந்தால் போதும்.