பாக்ஸ்கான் யங் லியு உட்பட வர்த்தகத் துறையில் 4பேருக்கும்,தமிழ்நாட்டில் 8பேருக்கும் பத்ம விருதுகள்..!
இந்தியாவில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விருதுகளை மத்திய அரசு பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம என மூன்று பிரிவுகளில் குடியரசு தினத்திற்கு முன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுகிறது.இந்த வகையில் 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 110 பேருக்கு பத்ம விருது என 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசு வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் தைவான் நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான ஹான் ஹை டெக்னாலஜி குழுமத்தின் (பாக்ஸ்கான்) தலைமைச் செயல் அதிகாரியும் தலைவருமான யங் லியு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.Foxconn யங் லியு, 1986 இல் தெற்கு கலிபோர்னியா.
பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியலில் எம்.எஸ் பட்டம் மற்றும் 1978 இல் தைவானின் தேசிய சியாவோ துங் பல்கலைக்கழகத்தில் மின் இயற்பியலில் பி.எஸ் பட்டம் பெற்றார்.இதுமட்டும் அல்லாமல் யங் லியு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொழில்துறை அனுபவத்தில் 3 நிறுவனங்களை உருவாக்கியுள்ளார்.
இதன் கீழ் தான் பாக்ஸ்கான் இயங்கி வருகிறது, இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த காரணத்திற்காகவும், நாட்டின் ஏற்றுமதி உயர முக்கியப் பங்குவிகித்ததைப் பாராட்டும் விதமாக யங் லியு-க்கு பத்ம பூஷன் விருது கிடைத்துள்ளது.
மேலும் வர்த்தகத் துறையில் ஜிண்டால் அலுமினியம் நிறுவனத்தை உருவாக்கிய சீதாராம் ஜிண்டால், ஐசிஐசிஐ வங்கி, ஜேபி மோர்கன் ஆகியவற்றில் உயர் பதவியில் இருந்து கல்பனா மோர்பரியா, சஷி சோனி என் மொத்தம்.
4 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் நடிகர் விஜயகாந்த், கோவையைச் சேர்ந்த பத்ரப்பன் எம், செல்வி ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ்,திருமதி ஜி நாச்சியார், சேசம்பட்டி டி சிவலிங்கம் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.