ரசிகர்கள் கொடுத்த பக்கா மாஸ் Surprise.. மிரண்டுபோன பிக் பாஸ் மணிச்சந்திரா – வேற லெவல் Celebration Video இதோ!

இதுவரை இல்லாத அளவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும், மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 7 சீசன் முடிந்துள்ள நிலையில் இரு சீசனங்களில் பெண் போட்டியாளர்கள் டைட்டில் வின்னராக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனை அர்ச்சனா வென்ற நிலையில் முதல் Runner Up வெற்றியாளராக பிரபல நடன கலைஞர் மணிச்சந்திரா வெற்றி பெற்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுதே மணிச்சந்திராவிற்கு மிகப்பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு கிடைத்தது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இளைஞர்கள் அவருக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர்.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் Runner Upஆக வெற்றி பெற்று வெளியேறிய நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஒரு பிரபல நிறுவனம் அவருக்கு சர்ப்ரைஸ் ஆக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் அவர் சற்றும் எதிர்பாராத விதத்தில் மிகப்பெரிய அளவில் அவருடைய ரசிகர்கள் கூட்டம் ஒன்றிணைந்து அவருக்காக கேக் வெட்டி மிகப்பெரிய போஸ்டர்கள் அடித்து அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

மேலும் அங்கு குவிந்திருந்த தனது ரசிகர்களுடன் இணைந்து மணிச்சந்திரா குத்தாட்டம் போட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் Runner Upஆக மணிச்சந்திர வென்ற நிலையில் இரண்டாம் இடம் பிடித்தார் பிரபல நடிகை மாயா எஸ் கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *