பாகிஸ்தான் பொதுத் தேர்தல்: இம்ரான் – ஷெரீப் இடையே கடும் போட்டி
பாகிஸ்தானில் நடைபெற்றுமுடிந்த பொதுதேர்தல் வாக்கெடுப்பில் இதுவரை 66 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முடிவுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, இதுவரை இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 22 இடங்களிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 22 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் முடிவு
மேலும், தற்போது ஆட்சியில் உள்ள ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் 265 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற 133 தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சி ஆட்சியமைக்க தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.