பாகிஸ்தான் வீரராக மாறிய ஐபிஎல் நட்சத்திரம்.. 30 வயதில் ஏன் இந்த முடிவு.. ரசிகர்கள் ஆச்சரியம்
சினிமா நட்சத்திரங்களை விட கிரிக்கெட் வீரர்கள் எந்த மாதிரி ஸ்டைலை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் பார்த்து பின் தொடர்வார்கள்.
அந்த வகையில் ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் திவாட்டியா எடுத்த முடிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
தன்னுடைய அபாரமான சுழற் பந்துவீச்சு மற்றும் அதிரடி பேட்டிங்கால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றவர் தான் ராகுல் திவாட்டியா. ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய போது 2020 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷில்டன் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
அதிலிருந்து ஓவர் நைட்டில் ஸ்டார் வீரராக உயர்ந்த ராகுல் திவாட்டியா இதே போல் பல அபாரமான இன்னிங்ஸ்ல ஆடி இருக்கிறார். தற்போது குஜராத் அணியின் ஃபினிஷராக விளையாடி வரும் ராகுல் திவாட்டியா இந்திய அணியில் வாய்ப்புக்காக இயங்கி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ரஞ்சிப் போட்டியில் அவர் செய்த காரியம் தற்போது வைரலாகி இருக்கிறது.
ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக விளையாடி வரும் ராகுல் திவாத்தியா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். 212 பந்துகளை எதிர் கொண்டு 144 ரன்கள் அவர் அடித்துள்ளார். இதில் 24 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்த போட்டியில் ராகுல் திவாத்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஜாவித் மியாண்டட் போல் தன்னுடைய கெட்டப்பை மாற்றி விளையாடினார்.
தன்னுடைய தாடியை முற்றிலுமாக நீக்கிவிட்டு பெரிய மீசையை வைத்து அவர் ஜாவித் மியாண்டட் போலவே காட்சி அளித்தார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் ராகுல் திவாட்டியா ஒரு பாகிஸ்தான் வீரராகவே மாறிவிட்டார் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஜாவித் மியாண்டட் ரஞ்சி போட்டியில் விளையாடியது போல் தெரிகிறது என்று பல ரசிகர்களும் பாராட்டி இருக்கிறார்கள்.