இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்
பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் அறிந்துகொள்ள மக்கள் துடிக்கும் நிலையில், அரண்மனை வட்டாரம் மௌனம் காப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னர் சார்லசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டபோது, அவருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது குறித்து அரண்மனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இளவரசி கேட் குறித்து எந்த விளக்கமான அறிக்கையும் வெளியாகவில்லை.
உடல்நிலை முன்னேற்றம்
இளவரசிக்கு வயிற்றுப்பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்ற தகவலுடன், அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார், ஈஸ்டர் பண்டிகை வரை அவர் அரசுப்பணிகளுக்குத் திரும்ப வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்ட பின்னர் இளவரசி கேட் குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய கால அவரது ஒரு புகைப்படங்கள் வெளியாகவில்லை என்பதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளதுடன், பொதுமக்களுக்கு அவரது உடல் நிலை குறித்து சந்தேகமும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அரண்மனை வட்டாரம் இளவரசி கேட்டின் உடல்நிலை முன்னேற்றமடைந்து வருகிறது என்ற ஒரு அறிவிப்பு தவிர்த்து வேறு விளக்கம் எதையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.