கொடூர வில்லியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை : ஜீ தமிழின் அண்ணா சீரியலில் முக்கிய மாற்றம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. தினசரி எபிசோடுகள் விறுவிறுப்பாக இருந்தாலும், முத்துப்பாண்டி சண்முகம் மோதல் அவ்வப்போது சலிப்பை ஏற்படுத்தி வருவரும், ரத்னாவை முத்துப்பாண்டி கடத்தும்போது இவருக்கு இதே தான் வேலையா என்றும் கடும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
சீரியலில் விறுவிறுப்பை கூட்ட திரைக்கதையில் மாற்றம் செய்தாலும், இது முத்துப்பாண்டி, ரத்னா, சண்முகம் இவர்கள் மூவரையும் சுற்றியேதான் வருகிறது. ஆனால் தற்போது அண்ணா சீரியலில் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் புது கேரக்டர் அறிமுகமாக உள்ளது. சௌந்தரபாண்டி தன்னுடைய தர்மகத்தா பதவியை பாதுகாத்து கொள்ள சண்முகத்தை தேர்தலில் நிற்க விடாமல் செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்.
சண்முகம் சூடாமணியின் வார்த்தையை ஏற்று தர்மக்கத்தா தேர்தலில் நின்று சௌந்தரபாண்டியின் தவறுகளை வெளியே கொண்டு வருவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த கதைக்களத்திற்கு புதிய நடிகையாக ஸ்ரீலேகா ராஜேந்திரன் என்டரி ஆக உள்ளார், வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்த இவர் சின்னத்திரையிலும் பல சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் நடித்து வரும் நிலையில், ஜீ தமிழன் அண்ணா, சீரியலில் பயங்கரமான வில்லியாக சௌந்தரபாண்டியின் அக்காவாக பாண்டியம்மா என்ற களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இவரது காட்சிகள் சீரியலில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.