சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும் பன்னீர் பூ!

நன்றி குங்குமம் டாக்டர்

யுர்வேத மருத்துவத்தில், பன்னீர் பூவின் பயன்பாடு அளப்பரியது. பார்ப்பதற்கு சுண்டைக்காய் போன்று இருக்கும் இந்த பன்னீர் பூ, மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது.

இது சொலனேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இந்த பன்னீர் பூ மூலிகை கடைகளில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்றே. இது கசப்பு நிறைந்தது. இதனை டீயாகவும் போட்டு குடிக்கலாம்.

தூக்கமின்மை நரம்பு சோர்வு, ஆஸ்துமா மாற்று நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும் தன்மை இதற்கு உண்டு.பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன்பாட்டை சரிசெய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் டைப்-2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பன்னீர் பூவானது இயற்கை மருந்தாக செயல்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில் இந்த காய்களை பீங்கான் கப்பில் மட்டுமே ஊறவைக்க வேண்டும். இதில் கசப்பு தன்மை அதிகம் இருப்பதால் நீங்கள் தினமும் குடிக்கும் டீ கப்பை பயன்படுத்துவது சிறந்தது. ஊற வைப்பதற்கு அறை கப் தண்ணீர் போதும். முதல் கட்ட சர்க்கரை நோய்க்கு 3 இல் இருந்து 4 காய்கள். இரண்டாம் கட்ட சர்க்கரை நோய்க்கு 7 இல் இருந்து 8 காய்கள். தினமும் இரவில் ஊறவைத்து காலையில் ஊறிய காயை வடிகட்டியில் வடித்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப் படியாக குறைந்து விடும்.

இரவு நேரத்தில் ஒரு பீங்கான் பாத்திரத்தில் தேவையான பன்னீர் பூவை போட்டு ஊறவைத்து பின் காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வர, சர்க்கரை நோய் விரைவில் குணமாகும். ஆஸ்துமா பிரச்னையும் சரியாகும். பன்னீர் பூ ஊறவைத்த நீரை அருந்துவதன் மூலம் நரம்பு சோர்வு பிரச்னை, இன்சுலின் பயன்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்.தூக்கமின்மை பிரச்னைக்கும் பன்னீர் பூ ஒரு சிறந்த பயன்பாடாக இருக்கிறது.இதனை சரி செய்ய எடுத்துக் கொண்டாலும் சர்க்கரையின் அளவினை பார்த்து குடித்தல் வேண்டும். இது ஆயுர்வேத பயன்பாட்டில் மிகவும் பயன் உள்ளதாகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *