மாடித் தோட்டத்தில் பப்பாளி வளர்ப்பது எப்படி?
இன்று சந்தையில் விற்கப்படும் பப்பாளி பழங்கள் பெரும்பாலும் ரசாயனங்கள் நிறைந்தவை. உங்களுக்கு இயற்கை உணவின் மீது தீராத பற்று இருந்தால் நீங்களே சொந்தமாக வீட்டில் பப்பாளி மரம் வளர்க்கலாம்.
அதற்கு தேவையான பொருட்கள் இரண்டு மட்டும்தான். ஒன்று பழைய டிரம். இன்னொன்று நல்ல மண்.
மாடித் தோட்டத்தில் பப்பாளி வளர்ப்பு
மரக்கன்று நடுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு அடி உயரமுள்ள கண்யெனர் அல்லது டிரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மண், கோகோபீட், கரிம உரம் மற்றும் ஈரமான மணல், அனைத்தையும் சம விகிதத்தில் நிரப்பவும்.
மாதத்திற்கு ஒருமுறை மரக்கன்றுகளுக்கு இரண்டு கைப்பிடி அளவு உரம் இடவும். அது மண்புழு உரமாக இருக்கலாம், மாட்டு சாணம் அல்லது வேறு எந்த கரிம உரமாகவும் இருக்கலாம்.
பப்பாளி இலைகளை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம், வேப்பம் பிண்ணாக்கு மற்றும் பப்பாளி இலைகளை மாட்டு கோமியத்தில், ஒரு மாதம் ஊறவைக்கலாம். அதை தண்ணீரில் கரைத்து இலைகளின் மேல் தெளிக்கவும்.