வயிற்று பிரச்சனைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் பப்பாளி: இப்படி சாப்பிடுங்க
பழங்களில் பல வித ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிகப்படியான நன்மைகளை அளிக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். பப்பாளியில் (Papaya) அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட்களும், நார்ச்சத்தும் மிக அதிகமாக காணப்படுகின்றன. இதில் உள்ள பப்பைன் என்ற என்சைன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
வயிற்றுப் பிரச்சனைகளை சரி செய்யும் பப்பாளி (Papaya For Stomach Problems)
வயிற்று பிரச்சனைகளும், கல்லீரல் பிரச்சனைகளும், தீவிர வயிற்று நோய்களும் பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். பப்பாளிச் செடி, அதன் இலைகள், வேர்கள், தண்டு, விதைகள் என இவை அனைத்தும் உடல் நேரடியாக பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ மற்றும் பல தாதுக்கள் காணப்படுகின்றன. பப்பாளி உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகின்றது. பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இது தவிர, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ -வுன் இதில் ஏராளமாக உள்ளது.
நமது தினசரி உணவில் பப்பாளியை தவறாமல் சேர்த்துக்கொண்டால், அது செரிமானத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மாம்பழம், ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற பிற பழங்களுடன் பப்பாளியை கலந்து சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். எனினும், உங்கள் வயிற்று பிரச்சனை தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.
பப்பாளியின் நன்மைகள் (Health Benefits of Papaya)
– வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: வயிற்றிற்குத் தேவையான வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பப்பாளியில் உள்ளன.
– செரிமானத்தை மேம்படுத்தும்: பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அஜீரணம், வாயுத்தொல்லை, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால், பப்பாளி சாப்பிடுவது நன்மை பயக்கும்.
– நார்ச்சத்து: பப்பாளியில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிறைவான உணர்வை அளிக்கின்றது, செரிமானத்தை பலப்படுத்துகிறது, வயிற்று பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றது. இதை உட்கொள்வதால் மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் பிற நன்மைகள்:
– நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
– ஆண்டி – ஏஜிங்
– கண் ஆரோக்கியத்திற்கு நல்லது
– சோர்வை குறைக்கிறது
– செரிமானத்தை மேம்படுத்துகிறது
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பப்பாளியை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
பப்பாளி சாறு: பப்பாளி சாறு செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவும். ஒரு சிறிய பப்பாளியை நறுக்கி அதன் சாறு எடுக்கவும். அதை ஒரு கிளாஸில் ஊற்றி நன்கு கலந்து குடிக்கவும்.
பப்பாளி வேர்: பப்பாளி வேரை உரித்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிடுவதும் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
பப்பாளி சாலட்: பப்பாளியை சாலட்டாகவும் பயன்படுத்தலாம். இதை மற்ற காய்கறிகளுடன் கலந்து அல்லது தனியாக சாலடாக உட்கொள்ளலாம்.
பப்பாளி சட்னி: பப்பாளி சட்னி வயிற்றுப் பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் உதவும். இதை பிற சட்னிகள் செய்யும் செயல்முறையில் செய்து சாப்பிடலாம்.