Papaya: பப்பாளியை இப்படி சாப்பிடுங்கள்… தொப்பை வெண்ணையாக கரையும்!
Weight Loss, Papaya Fruit: உடல் எடை குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகமாகியிருக்கிறது. காரணம் உடல் பருமன் தற்போது மிக முக்கிய பிரச்னையாக உள்ளது.
குறிப்பாக, உடல் பருமனால் பல்வேறு நோய்களும் வர வாய்ப்புள்ளதால் உடல் எடையை குறைப்பதை பலரும் சிரத்தையுடன் மேற்கொள்கின்றனர்.
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை தங்களின் அன்றாடத்தில் மிக மிக ஒழுங்காக பயன்படுத்தினால் மட்டுமே உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அந்த வகையில், உடல் எடை குறைப்பில் பழங்களை, உங்கள் சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்வதும் மிகுந்த பயனளிக்கும். அதில் பப்பாளி பழமும் உடல் எடையை குறைக்க பயன்படும். அவற்றை எவ்வாறு நமது அன்றாடத்தில் கொண்டுவந்து உணவாக உண்பது என்பதை இதில் காணலாம்.
உணவில் இப்படி சேர்த்துக்கொள்ளுங்கள்
பப்பாளியை மூன்று வேளை உணவில் எப்போது வேண்டும் என்றாலும் சேர்த்துக்கொள்ளளாம். காலை உணவின் போது பப்பாளியை துண்டு துண்டாக வெட்டி சாலட் வகையில் சாப்பிடலாம். இதனுடன் ஓட்ஸையும் நீங்கள் சாப்பிடலாம். மதிய பொழுதுகளில் பப்பாளி பழத்தை நீங்கள் ஜூஸ் போட்டு குடிக்கலாம். மேலும், பப்பாளி சாலட்டில் கீரை, பூண்டு, தக்காளி, எலுமிச்சை சாறு, உப்பு போட்டு சேர்த்து சாப்பிடும்போது இன்னும் சத்து மிகுந்ததாக இருக்கும்.
மாலை பொழுதுகளில் நொறுக்குத் தீனியை தவிர்க்கும்போது, பப்பாளியை சாப்பிட்டு பசியை தணிக்கும் முடியும். இதற்கு பப்பாளி மற்றும் அன்னாசிப்பழம் கலந்து ஸ்மூத்தி போன்று செய்து அதனை குடிக்கலாம். இதனால், விரைவாக பசி எடுக்காது.
இரவில் பலரும் பழங்களை சாப்பிட மாட்டார்கள். வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், பப்பாளி பழம் இரவுக்கும் ஏற்ற பழமாகும். எனவே, பப்பாளியை இரவிலும் நீங்கள் சாப்பிடலாம்.
இந்த பழம் இரவு உணவிற்குப் பிறகு இனிப்பாக சாப்பிடும் வகையில் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை போட்ட இனிப்பில் கொழுப்பு இருக்கும், இது கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடலில் எவ்வித நச்சும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.