Papaya: குளிர்காலத்தில் பப்பாளியை இப்படி சாப்பிட்டால் ‘3’ நோய்கள் வரவே வராது!
பல வித ஊட்டச்சத்துகளை அளிக்கும் பழங்களும் காய்களும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
காயாக இருக்கும்போதும் பழமாக பழுத்த பிறகும் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. முக்கனிகளில் ஒன்றாக இடம் பெறாவிட்டாலும், மா, பலா மற்றும் வாழை ஆகிய முக்கனிகளுக்குப் பிறகு, பழமாக கனிந்த பிறகும், காயாக இருக்கும்போதும் ஆரோக்கியத்தை கூட்டும் பண்பைக் கொண்டது பப்பாளி. வாழையைப் போலவே, பப்பாளியின் இலைகள் மட்டுமல்ல, பப்பாளி விதைகளும் மருத்துவப் பண்புகளைக் கொண்டது.
பப்பாளி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தினசரி சாப்பிட உகந்த இந்தப் பழத்தை அனைவரும் உண்ணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற
ஃபோலேட், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை உட்கொள்வதால் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் குறைவதோடு, எலும்புகளும் வலுவடையும். அனைத்துப் பருவத்திலும் பப்பாளி சுலபமாக கிடைக்கிறது.
குளிர்காலம் அல்லது கோடை காலம் என எதுவாக இருந்தாலும், பப்பாளி ஒவ்வொரு சீசனிலும் சந்தையில் கிடைக்கும். குளிர் காலத்தில் பப்பாளியின் விலை குறைவாகவே இருக்கும். இந்த சீசனில் பப்பாளியை அதிகம் சாப்பிடலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
பப்பாளி குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் அதன் தன்மை வெப்பமமானது என்பதால், குளிர்காலத்தில் பப்பாளி நமது உடலுக்கு பல வழிகளில் நன்மை செய்கிறது. சூப்பர் உணவு என்றும் அழைக்கப்படும் பப்பாளிப் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் தாதுக்களும் இருப்பதால், பப்பாளியை அனைவரும் உண்ணலாம்.
பப்பாளியின் தன்மை
இதன் தன்மை உஷ்ணத்தைக் கொடுப்பதால் கோடையில் உண்பதைவிட, குளிர்காலத்தில் அதிகமாக உண்ணப்படுகிறது. குளிர்காலத்தில் பப்பாளியை உட்கொள்வதால் உடல் சூடாக இருக்கும்.
கல்லீரலுக்கு பப்பாளி
இது மட்டுமின்றி, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றிற்கு பப்பாளி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும் பெரிதும் உதவுகிறது. குளிர்ந்த காலநிலையில் பப்பாளியை உண்பது மிகவும் நல்லது.
வயிற்று பிரச்சனைகளுக்கு பப்பாளி
பப்பாளி வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அஜீரணம், நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ், வயிற்றுப் புண்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து மிகுதியாக உள்ள பப்பாளி, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. பப்பாளியில் உள்ள புரதம் உடலில் ஒரு சூப்பர் நொதியாக செயல்படும். பப்பைன் என்ற சிறப்புப் பொருள் பப்பாளியின் மிகவும் சிறந்த அம்சமாகும்.