உடல் எடையை வேகமா குறைக்கும் பப்பாளி.. இன்னும் பல நன்மைகளும் இதில் இருக்கு
எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உணவின் அளவை குறைத்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று நினைக்கிறோம். ஆனால், உணவை குறைப்பதால் உடல் எடை குறையாது, மாறாக நமது உடலின் ஆற்றலில்தான் பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக நாம் தினசரி உட்கொள்ளும் சில காய்கள் மற்றும் பழங்கள் மூலமாகவே உடல் எடையை குறைக்கலாம். அப்படி உடல் எடையை குறைக்க மிகவும் உதவும் ஒரு பழத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கு பப்பாளி (Papaya for Weight Loss):
பப்பாளியில் காணப்படும் பல ஊட்டச்சத்துகள், உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. பப்பாளியில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொழுப்பு மற்றும் எடை குறைகிறது. எடை இழப்புக்கு (Weight Loss) இது சிறந்த பழமாக கருதப்படுகிறது.
பப்பாளி (Papaya) மிகவும் குறைந்த கலோரி கொண்ட பழம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சாப்பிட்டு நீண்ட நேரம் ஆனாலும், வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதன் காரணமாக பயனற்ற, ஆரோக்கியமற்ற பொருட்களை ஆங்காங்கே சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. கலோரிகள் குறைவாக இருப்பதுடன், பல வைட்டமின்களும் பப்பாளியில் இருக்கின்றன. பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Health Benefits of Papaya)
காலை உணவில் பப்பாளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்
தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் உடல் பருமனை குறைக்க, தினமும் காலை உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு ஏராளமான ஆற்றலை வழங்குவதோடு, படிப்படியாக அதிகப்படியான கொழுப்பையும் குறைக்கும். பப்பாளியை துண்டுகளாக நறுக்கி காலை உணவாக சாப்பிடுங்கள்.
பப்பாளி சாறு குடிக்கவும்
உடல் எடையை குறைக்க, பப்பாளி சாற்றை (Papaya Juice) உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளி ஜூஸ் குடிப்பதால் உடலில் சேரும் கொழுப்பு குறையும். பப்பாளியில் உள்ள சத்துக்கள் உடல் கொழுப்பைக் குறைத்து உடற்தகுதியை மேம்படுத்த உதவுகிறது.