Parenting Tips : உங்கள் குழந்தையுடன் ஆரோக்கியமான பிணைப்பை உருவாக்குவது எப்படி?
உங்கள் குழந்தையுடன் அன்பு மற்றும் பிணைப்பை உருவாக்குவது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகமிக அவசியம் ஆகும். இது ஒரு அருமையான பயணம். நீங்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவை வகுத்துக்கொள்வதற்கு சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அன்பையும் ஆதரவையும் காட்டுங்கள்
உங்கள் குழந்தைக்கு அன்பையும் ஆதரவையும் காட்டுங்கள். அது உங்களின் பிணைப்பு அதிகரிக்க உதவும். உங்களின் உணர்வுகளை வெளிக்காட்டுங்கள். அவர்களை தொடுங்கள், புன்னகை புரிவது, அர்த்தமுடன் பார்ப்பது, அவர்களை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்துவது என உங்கள் அன்பை அத்தனை வழிகளிலும் வெளிக்காட்டுங்கள்.
அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள்
அவர்கள் மீது உங்களுக்குள்ள அன்பை வெளிக்காட்டிக்கொண்டேயிருங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். அது அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, அவர்களுக்கு படுக்கை அறை கதைகள் வாசிப்பது அல்லது கூறுவது, சமையல் கற்றுக்கொடுப்பது, அவர்களை கைவினைப்பொருட்கள் செய்யவைப்பது என அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள்.
உரையாடல்
உங்கள் குழந்தைகள் கூறுவதை கவனியுங்கள். அவர்களின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். திறந்த உரையாடல் அவர்களுடன் நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். உங்கள் குழந்தையின் வார்த்தைகள் கேட்கப்படும், புரிந்துகொள்ளப்படும், மதிக்கப்படும் ஒரு சூழலை உருவாக்குங்கள்.
எடுத்துக்காட்டாக வாழுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வாகுங்கள். அவர்களுக்கு அனுதாபத்தை கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு நேர்மறையான எல்லைகளை வகுத்துக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளை புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் தவறுகளை அவர்கள் கற்றுக்கொள்ளும் ஒரு நல்வாய்ப்பாக மாற்றி அமையுங்கள்.
உங்கள் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
உங்கள் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களின் தொழில்நுட்ப கருவிகளை அணைத்துவிட்டு, அவர்களின் உலகில் மூழ்கிவிடுங்கள். அவர்களின் ஆர்வங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது உங்கள் பிணைப்பை பலப்படுத்துவது மட்டுமல்ல அவர்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள் என்றும் எடுத்துக்கூறுகிறது.
குடும்பம் பிணைத்திருக்கும் நடவடிக்கைகள்
விளையாட்டு, சுற்றுலா செல்வது, குழந்தைப்பருவ நினைவுகளை பகிர்ந்துகொள்வது என குடும்ப பிணைப்புகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இந்த அனுபவங்கள், நினைவைவிட்டு நீங்கா நினைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தி, குடும்பத்தை பலப்படுத்தும்.
அன்பான சுற்றத்தை உருவாக்குங்கள்
ஒரு அன்பான சுற்றத்தை உருவாக்குங்கள். விளையாட்டுகள் மூலம் உரையாட ஊக்குவியுங்கள். உரையாடல்களுக்கு இடையே விளையாட்டு, விளையாட்டுக்கு இடையே உரையாடல் என மாற்றி மாற்றி அவர்களுடன் இணைந்திருங்கள். உங்கள் குழந்தைக்கு வீட்டில் பாதுகாப்பையும், சௌகர்யமான உணர்வையும் ஏற்படுத்தி தாருங்கள்.