Parenting Tips : கணக்கு பிணக்கல்ல! உங்கள் குழந்தைகளுக்கு கணிதப்பாடத்தை எளிதாக்குவது எப்படி?

கணிதம் என்ற ஒற்றை பாடத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அச்சம் அனைத்து பாடங்களிலும் பிரதிபலிக்கிறது. பள்ளி பாடங்கள் அனைத்திலும் அவர்கள் பின்தங்குகிறார்கள். அவர்களால் கணிதத்தையும் கற்க முடியவில்லை.

இதனால் குழந்தைகளுக்கு எதிர்மறை சிந்தனைகள் ஏற்படுகிறது. சமூகத்தின் பார்வை. அவர்கள் அந்தப்பாடத்தை கற்க வற்புறுத்துவது, அதிக மதிப்பெண் எடுக்க வலியுறுத்துவது குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

கணித பயத்தை போக்குவதற்கு குழந்தைகளுக்கு நாம் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். கணிதம் குறித்து நேர்மறை சிந்தனைகளை கொடுக்க வேண்டும். குழந்தைகள் படிக்க ஏதுவான சூழலை உருவாக்கித்தரவேண்டும்.

வளர்ச்சி மனநிலையை உருவாக்கி, கணிதத்தை எளிமையாக்கித்தர வேண்டும். இவ்வாறெல்லாம் செய்யும்போது குழந்தைகளுக்கு கணிதத்தின் மீதான அச்சம் போகிறது. கணிதத்துடன் நேர்மறையான உறவையும் குழந்தைகள் பேணுவார்கள்.

குழந்தைகளுக்கு கணக்குப்பாடத்தை விளையாட்டாக கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு தேவையான ஆக்டிவிட்டிகளை கணித பாடத்துடன் சேர்த்து கற்க பழக்கப்படுத்தவேண்டும். அது அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும். கணிதத்தை குழந்தைகள் விரும்பும் வகையில் கற்றுக்கொடுக்கும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

கணிதம் சார்ந்த பசில்கள், குழந்தைகளுக்கு விளையாட்டாகவும் இருக்கும். கார்ட் கேம்கள், போர்ட் கேம்கள், ஆன்லைன் கணக்கு விளையாட்டுகள் ஆகியவை குழந்தைகளுக்கு கணிதத்தை மகிழ்ச்சிகரமாக கற்க உதவும் வழிகளாகும்.

கணக்குப்பாடங்களை வாழ்க்கையுடன் சேர்த்து கற்றுக்கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை வீட்டுக்கு நீங்கள் வாங்கும் ஷாப்பிங் பொருட்களுடன் வைத்து கற்றுக்கொடுங்கள். அளவீடுகளையும் கடைக்கு செல்வதுடன் ஒப்பிட்டு கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஜியோமெட்ரிக் அளவீடுகள் மற்றும் பேட்டர்ன்களை, கலை மற்றும் கைவினை இணைத்து கற்றுக்கொடுக்க வேண்டும். கணிதம் தொடர்பான ஆர்ட் ப்ரொஜெக்ட்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், கிரியேட்டிவாக அவர்கள் இருப்பதற்கும் உதவுகிறது. அவர்கள் கணித கான்செப்ட்களையும் புரிந்துகொள்கிறார்கள்.

கதைகள் மூலமும் கணிதப்பாடத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். கணக்குகளை தீர்க்கும் கதாபாத்திரங்களை கதைகளில் உருவாக்கி, கணக்கு தொடர்பான சாகச உணர்வை பெறுங்கள்.

பில்டிங் பிளாக்குகள் போன்ற விளையாட்டு சாமான்களை பயன்படுத்துங்கள். முத்துமணிகளை எண்ணிக்கைக்கு பயன்படுத்துங்கள். அளவிடும் கருவிகள் குழந்தைகளுக்கு கணிதத்தை புரிந்துகொள்ள உதவுகிறது.

போர்ட் வைத்து எண்களை எழுதி, வரைந்து, வடிவங்களை வரைந்து, விளையாட்டுகள் மூலம் கணக்கை சொல்லிக்கொடுக்கும்போது, குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கற்கிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *