Parenting Tips : தன்னம்பிக்கையை இழந்து துவண்டுபோகும் குழந்தைகளுக்கு பெற்றோர் எப்படி உதவலாம்?

Parenting Tips : தன்னம்பிக்கையை இழந்து துவண்டுபோகும் குழந்தைகளுக்கு பெற்றோர் எப்படி உதவலாம்?ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர்வதற்கு உதவவேண்டும். அது மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவர்களாக இருப்பார்கள். அவர்களால் வாழ்வில் எதிர்த்து போராட முடியாத நிலை ஏற்படும். இதனால் அவர்கள் தங்களைக்குறித்து தவறாக எண்ணிக்கொள்வார்கள்

அவர்களுக்கு பள்ளி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றங்கள் என அவர்களின் வாழ்வில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். அவர்கள் அவை அனைத்தையும் சமமாக எடுத்தக்கொள்ள அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை அவசியம்.

அவர்களுக்கு வரும் பிரச்னைகளால் அவர்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். எனவே நீங்கள் அவர்களுக்கு போதிய வழிகாட்ட வேண்டும்.

குழந்தைகள் ஏன் நம்பிக்கையை இழக்கிறார்கள்

அவர்களுக்கு ஆதரவில்லாதபோதும், அவர்களை விமர்சிக்கும்போதும் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். குழந்தைகளை மதிக்காதபோதும், அவர்கள் மீது அன்பு செலுத்தாதபோதும் அவர்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள். எனவே அவர்களை ஆதரிக்கும், வளர்த்தெடுக்கும் சூழல் மிகவும் அவசியம். அது அவர்களின் நம்பிக்கையை வளர்க்கும்.

பள்ளி வாழ்க்கைக்கு பழகுவது

குழந்தைகளுக்கு பள்ள வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்படும். புதிய சூழல்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் தடைகளாக செயல்படும். எனவே அவர்களுக்கு பெற்றோர்கள் வழிகாட்டிகளாக செயல்படவேண்டும். குழந்தைகளுக்கு அவர்களின் சவாலான வாழ்க்கை பயணத்துக்கு உதவவேண்டும். அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்

எதிர்பார்ப்புகள்

குழந்தைகள் மீது எப்போதும் அதிகளவில் எதிர்பார்ப்புகள் இருக்கும். பள்ளிப்படிப்பு, பெற்றோர் ஒப்புதல் மற்றும் வயதையொத்த குழந்தைகள் ஏற்பது என அவர்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே பெற்றோர் இவற்றையெல்லாம் எளிதாக மாற்றும் ஒரு சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்திதரவேண்டும். தவறுகளே வெற்றிக்கான படிகட்டுகளாக மாற்றித்தரவேண்டும்மற்றவர்களுடன் ஒட்டாமல் இருப்பது

பள்ளியில் மற்ற மாணவர்களுடன் ஏற்படும் பிரச்னைகள், வாக்குவாதங்கள் குழந்தைகளின் மனதில் எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. அது அவர்களின் சுய மதிப்பை குறைக்கின்றன. எனவே அவர்களுக்கு அனுதாபத்துடன் நடக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறனை கற்றுக்கொடுத்தாலே போதும், அவர்கள் மற்றவர்களுடன் எளிதாக பழகுவார்கள். இது அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்

மற்றவர்களுடன் ஒப்பிடுவது

சமூக வலைதளங்களின் உச்சகட்ட காலத்தில், உண்மையில்லாத விஷயங்கள்தான் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே சுய பிம்பம் குறித்து குழந்தைகள் நிறை கற்றுக்கொள்கிறார்கள். எனவே அவர்கள் ஆரோக்கியமான சுயபிம்பத்தை அடைய கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட பலங்களை வளர்த்தெடுக்க பெற்றோர் உதவவேண்டும்

.தவறு செய்வதில் இருந்து காக்க வேண்டும்

அதிகமாக குழந்தைகளை பாதுகாத்து வைப்பது அவர்கள் தவறு செய்வதில் இருந்து தப்பிக்க வைத்து, அதிலிருந்து கற்பதை தடுக்கிறது. அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி, அவர்களுக்கு இடம் கொடுத்து, அவர்களை கொண்டாடி, அவர்களின் தன்னம்பிக்கை வளர்த்து அவர்கள் மனம் வளர்ச்சியடைய வழிவகுக்க வேண்டும்

.அதிகம் அன்பு மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் தூணாக இருங்கள்.

பொறுப்புக்களை கொஞ்சம், கொஞ்சமாக ஒப்படையுங்கள். அதை அவர்கள் நிறைவேற்றி அதன் மூலம் அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்துங்கள். இது அவர்களின் திறன்களின் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தவறுகளை குழந்தைகளின் வெற்றிக்கான படிகட்டுகளாக மாற்றுங்கள். தவறுகள் செய்வது இயற்கையாகவே கற்கும் வழி என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமானதை வளர்த்தெடுங்கள். கலை, விளையாட்டு மற்றும் அறிவியல் என அவர்களுக்கு பிடித்தவற்றை செய்ய ஊக்குவியுங்கள். அவர்களின் ஆர்வத்தை வளர்த்து அவர்களுக்கான அடையாளங்களை உருவாக்க வழிகாட்டுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *