Parenting Tips : உங்கள் குழந்தைகளை வெற்றியாளராக்கும் மந்திரங்கள்!
உங்கள் குழந்தையின் ஆளுமையை வளர்த்தெடுக்க வேண்டுமெனில், வாழ்வின் சவால்களை சந்தித்து அதற்கு உங்களை தகுதிபடுத்திக்கொள்ள பெற்றோர் மிகவும் அவசியம். குழந்தைகள் வாழ்வில் முன்னேறிச்செல்ல அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய மந்திரங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்
தடைகளை தாண்டி, ஏமாற்றங்களை கடந்து ஓடும் மனப்பக்குவத்தை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். நேர்மறை சிந்தனைகளை அவர்கள் மனதில் விதையுங்கள். தவறுகளில் இருந்து கற்பதற்கு அவர்களை தயார் படுத்துங்கள்.
ஆர்வம்
ஆர்வத்துடன் இருக்கும் மனம்தான் கற்றல் மற்றும் வெளியிடுதலை ஊக்குவிக்கும். குழந்தைகளை கேள்விகள் கேட்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். பதில்கள் கூற வைக்க வேண்டும். இது அவர்களின் அறிவை வளர்ப்பதற்கு உதவும்.
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையை குழந்தைகளில் வளர்த்தெடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுவே குழந்தைகள் தங்கள் இலக்குகளை அடையவும், ஆபத்துக்களை எதிர்கொள்ளவும் ஊக்குவிக்கும். வெற்றிக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உரையாடல்
குழந்தைகள் தெளிவாக உரையாட வேண்டும். அவர்களின் உரையாடல் திறனை வளர்த்தெடுக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் யோசனைகள் மற்றும் உணர்வுகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும். அடுத்தவர்களின் யோசனைகள் மற்றும் உணர்வுகளை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். உறவை வளர்க்க திறந்த, வெளிப்படையான, நேர்மறையான உரையாடல் மிகவும் அவசியம். இது வாழ்வின் பல்வேறு காலகட்டங்களையும் கடந்துசெல்ல உதவும்.
கிரியேட்டிவிட்டி
உங்கள் குழந்தைகளிடம் கிரியேட்விட்டியை வளர்க்க வேண்டும். உருவாக்கும் திறனை வளர்க்க வேண்டும். சவால்களை சந்திக்கும் திறனை வளர்த்தெடுக்க வேண்டும். தனித்தன்மைமிக்க முடிவுகளை எடுக்க வேண்டும். கிரியேட்டிவிட்டி நிறைந்தவர்கள் வெற்றிக்கு புதிய வழிகளை அடிக்கடி கண்டடைகிறார்கள்.
இமோஷனல் இன்டெலிஜென்ஸ்
உங்கள் குழந்தைகளை இமோஷனல் இன்டலிஜென்ட்டாக வளரவிடுங்கள். உங்கள் குழந்தைகளை அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வது மற்றும் கையாள கற்றுக்கொள்வது என தெரிந்திருக்க வேண்டும். அடுத்தவர்களுடன் அனுதாபத்துடன் நடந்துகொள்ள பழக்கப்படுத்துங்கள். இந்த திறன் ஆரோக்கியமான உறவை கட்டமைக்க மிகவும் முக்கியமானது. இது பிரச்னைகளை கையாள உதவுகிறது.
அனுதாபம்
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் மற்றும் என்ன சிந்திப்பார்கள் என்பது குறித்து உங்கள் குழந்தைக்கு யோசித்து அவர்களிடம் அனுதாப உணர்வுகளை வளர்த்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது. அனுதாப குணம் நிறைந்தவர்கள்தான், சமூக சூழல்களை கையாள தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆழ்ந்த பிணைப்புகளை உருவாக்குபவராகவும் இருக்கிறார்கள்.
சுய கட்டுப்பாடு
சுயகட்டுப்பாடு மற்றும் நன்றியுணர்வு ஆகிய இரண்டையும் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். குறிக்கோள்களை வகுத்துக்கொள்ள வேண்டும். உங்களின் அட்டவணைப்படி வாழ்வு சிறக்க வேண்டும். இந்த திறன்களின் அடிப்படையில் நல்ல முடிவுகளை எடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு சுயகட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமாகிறது.
பொருளாதார கல்வி
உங்கள் குழந்தைகளுக்கு பொருளாதார கல்வி என்பது மிகவும் தேவையான ஒன்றாகும். பணம் வரும் வழிகள், சேமிப்பது, பட்ஜெட் போட்டு செலவு செய்வது, பணத்தின் மதிப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இந்த திறன்கள் அவர்களுக்கு சுதந்திரம் மற்றும் பொருளாதார பொறுப்பு ஆகியவற்றை கொடுக்கின்றன.