Parenting Tips : உங்கள் குழந்தையின் திரை நேரத்தை குறைக்கும் வழிகள்!
உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமான உடல் நலன் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் சமமாக எடுத்துச்செல்ல வழிகள் இவைதான்.
புத்தாண்டில் உங்களில் சிலர் தீர்மானங்களை எடுத்து அதை கடைபிடிக்க முயல்கிறீர்கள். அதில் பெரும்பாலும் உடல் எடை குறைப்பது, சமூகவலைதளங்களில் இருந்து விடுப்பு எடுத்துக்கொள்வது என்பதாகும். டிஜிட்டல் டிவைஸ்களில் இருந்து விலகியிருத்தல் நல்லது. அதை உங்கள் குழந்தைகளும் கடைபிடிக்கட்டும். இது இளம் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு மிகவும் அவசியமான ஒன்று.
குழந்தைகள் திரைக்கு அடிமையாவதில் உள்ள ஆபத்துக்கள் என்ன?
செல்ஃபோன், டேப்லெட்கள், வீடியோ கேம்கள், டிவி, லேப்டாப் என குழந்தைகள் ஏதோ ஒரு திரைக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. வளர் இளம் பருவக்குழந்தைகள், சமூக வலைதளங்களில் மூழ்கிவிடுகிறார்கள். நீண்ட நாட்கள் அவர்கள் இதுபோல் செயல்படும்போது, அவர்களின் மனநலன் பாதிக்கப்படுகிறது.
இது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கிறது. அவர்களின் நடத்தையை கடுமையாக்குகிறது. தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. உடல் எடை அதிகரிக்க காரணமாகி, உடற்பயிற்சியை குறைக்கிறது. மேலும் இது பயம், பதற்றம், தற்கொலை எண்ணம் ஆகிய அனைத்தையும் ஏற்படுத்துகிறது. இவையனைத்தும் இந்த திரை நேரம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் ஆகும்.
குழந்தைகள் திரைக்கு அடிமையாகியுள்ளதன் அறிகுறிகள் என்ன?
அவர்களால் திரையை பார்க்காமல் இருக்கவே முடியாது.
சாப்பிடும்போது கூட அவர்கள் செல்ஃபோன்களை பயன்படுத்துவார்கள்.
எழுந்தவுடனே அவர்கள் செல்ஃபோனைத்தான் முதலில் தேடுவார்கள்.
அவர்களுக்கு திரை கொடுக்கப்படவில்லையென்றால், அதற்காக அடம் பிடிப்பார்கள்.
நேரம் காலம் அறியாமல் திரையில் மூழ்கிகிடப்பார்கள்.
குழந்தை அதிகம் மனஅழுத்தத்துக்கு ஆளாக நேரிடும். வாழ்க்கைத்தரம், வேலை என அனைத்தும் பாதிக்கும். அமையின்றி வளர்வார்கள்.
அவர்களின் திரை நேரத்தை குறைக்க விரும்பினால், நீங்கள் அவர்களுக்கு கட்டளையிடக்கூடாது. குழந்தைகள் பெரியவர்களை அப்படியே பிரதிபலிக்கிறார்கள்.
உங்கள் குழந்தைகளை டிஜிட்டல் திரைக்கு அடிமையாவதில் இருந்து காக்கும் வழிகள்!
நீங்களும் டிஜிட்டல் டீடாக்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்
உங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை தூர வையுங்கள். குறிப்பாக குடும்பத்தினருடன் நீங்கள் தரமான நேரம் செலவிடும்போது கட்டாயம் செல்ஃபோன்களை தூர வையுங்கள். உங்களின் சமூக வலைதள நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகள் முன்னால் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
குறிப்பிட்ட நேரங்களில் டிவைஸ்கள் பயன்படுத்தக்கூடாது
உங்கள் குழந்தைகள் குறிப்பிட்ட நேரங்களில் குழந்தைகள் திரையை பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதிப்படுத்துங்கள். குறிப்பாக சாப்பிடும்போதும், உறங்கச்செல்வதற்கு முன்னரும் திரைக்கு கட்டாயம் இல்லை என்று சொல்லுங்கள். குழந்தைகளின் தூக்க நேரத்தை முறைப்படுத்தவேண்டும். படுக்கையில் அவர்களுக்கு அருகில் எந்த டிவைஸ்களையும் வைக்கக்கூடாது. குழந்தைகள் 8 முதல் 9 மணி நேரம் வரை ஆழ்ந்து உறங்க வேண்டும். அதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவுங்கள்.
குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பழக்கவழக்கத்தை உருவாக்குங்கள் அல்லது ஏதேனும் வகுப்புக்கு அனுப்புங்கள்
நடனம், நீச்சல், உடற்பயிற்சி, இசை என குழந்தைகளுக்கு பிடித்த ஒன்றாக இருக்கலாம். குழந்தைகள் தாங்களாகவே செய்துகொள்ளும் பணிகளில் ஈடுபடுத்தங்கள். அது அவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவுகிறது. அவர்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தில் அவர்கள் ஏதேனும் செய்தால் அவர்களுக்கு அது மாற்றத்தை ஏற்படுத்தும்.
குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ந்திருங்கள் அல்லது இரவுக்கு முன் அல்லது பின் விளையாட்டில் ஈடுபடுவது
மொத்த குடும்பமும் சேர்ந்து ஒரு மணி நேரம் விளையாடுங்கள். அது உங்களுக்கு நிறைய நினைவுகளை ஏற்படுத்திதரும். குழந்தைகள் அனைவரும் சேரும் ஏதேனும் பார்டிகளை வைத்து அவர்களை கொண்டாட்டத்தில் ஈடுபடுத்துங்கள். இது குழந்தைகளை சுறுசுறுப்பாக இருக்க வைக்க உதவும். அவர்களுக்கு கூடுதல் பலத்தையும் இது வழங்குகிறது.
புத்தக வாசிப்பு
குழந்தைகளின் புத்தக வாசிப்பை ஊக்குவியுங்கள். மொத்த குடும்பமுமே தினமும் ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பில் ஈடுபடவேண்டும். பின்னர் வாசித்து முடித்தவுடன், அந்த புத்தகம் குறித்து பேசுங்கள். குழந்தைகள் அவர்களின் பெற்றோர் மற்றும் மற்ற உறுப்பினர்களுடனும் புத்தகம் குறித்து உரையாட வேண்டும்.
கலைகளை கற்றுக்கொள்ளுங்கள்
கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் செய்வதற்கு கற்றுக்கொள்ளுங்கள். இது குழந்தைகளிடம் கிரியேட்விட்டி வளர உதவும். கிரீட்டிங்க கார்டுகளை வரைய வைப்பது, ஓவியம் வரைவது, தையல் என அவர்களுக்கு சில நடவடிக்கைகளை கற்றுகொடுங்கள். இது அவர்களின் திரை நேரத்தை குறைக்க உதவும்.
வெளியே விளையாடுவது
குழந்தைகளில் வீட்டைவிட்டு வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும். சூரியஒளியிலும், இயற்கையுடனும் குழந்தைகள் விளையாட வேண்டும். குழந்தைகளுடன் நடக்க வேண்டும். பார்க்குக்கு செல்லவேண்டும். அவர்களுடன் வெளியில் ஃபுட்பால் மற்றும் கிரிக்கெட், பேட்மின்டன் விளையாடலாம். இது குழந்தைகளுக்கு போட்டி மனப்பான்மையை வளர்ப்பதுடன், அவர்களுக்கு உடல் நலனை பாதுகாக்க உதவும்.
ஆரம்பத்திலேயே குறைத்துவிட்டால், நல்லது அல்லது குழந்தைகள் அடிமையாகிவிட்டால் அது சிரமம். குழந்தைகள் பயன்படுத்தும் ஆப்கள் குறித்து பெற்றோர் கண்காணிக்கும் வசதிகள் உள்ளது. பெற்றோர் கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.
அவற்றையும் தெரிந்துகொண்டு பயன்படுத்தவேண்டும். பொழுதுபோக்கு சாதனங்களைப் பயன்படுத்த சில நேரங்களில் பயன்படுத்த அனுமதிக்கலாம்.
அவர்கள் செய்யக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அவர்களின் திரை நேரத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.