11 நாட்கள் சிசுவை வைத்தியசாலையில் விட்டு தப்பியேடிய பெற்றோர்: நீதிபதி பிறப்பித்த கடும் உத்தரவு

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பெற்றோரால் கைவிடப்பட்ட 11 நாட்களே ஆன சிசு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சிசுவின் உடனடியாக பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பெற்றோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தையின் பிரேதப் பரிசோதனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் சில நாட்களுக்கு முன் ​வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பதில் நீதவான் பொலிஸாருக்கு பெற்றோரை கைது செய்யும்படி உத்தரவு வழங்கியுள்ளார்.

இதன்படி, உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான DNA பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும்
சிசுவின் பெற்றோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்ற தகவலையும் கவனத்தில் கொண்ட பதில் நீதவான், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பொல்கஹவெல கொடவெல பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியரே இந்த சிசுவின் பெற்றோர் என சந்தேகிக்கப்படுவதாகவும், தம்மி அபேசிங்க என்ற இளம் யுவதியே குழந்தையை பிரசவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என சந்தேகிக்கும் பொலிஸார், அவர்களை கைது செய்வதற்காக அவர்கள் மறைந்திருக்கும் இடங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *