நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு.. திமுக – காங்கிரஸ் ஜனவரி 28-ல் பேச்சுவார்த்தை

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதிப் பங்கீடு, கூட்டணி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி வரும் 28 ஆம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக முகுல் வாஸ்னிக், அசோக் கெலாட், பூபேஷ் பாகெல், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு வருகின்ற 28 ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளது. இந்த குழுவினருடன் தமிழக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் இணைந்து டி.ஆர் பாலு தலைமையிலான திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் நாளை (ஜனவரி – 25) நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *