பாக்ஸ்கான் கலக்கல் அறிவிப்பு.. மெகா முதலீட்டில் புதிய தொழிற்சாலை கட்டுகிறோம்.. சென்னையிலா..?

இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்புக்கும், ஏற்றுமதிக்கும் வித்திட்ட பாக்ஸ்கான் செவ்வாய்க்கிழமை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு பலரையும் வியக்கவைத்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரித்து வரும் பாக்ஸ்கான் அடுத்து எலக்ட்ரிக் கார்களையும், செமிகண்டக்டர் சிப்-களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஒவ்வொரு முடிவும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பாக்ஸ்கான் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்களுடைய இந்திய கிளை நிறுவனம் சுமார் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலையைக் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்தப் புதிய தொழிற்சாலை ஏற்கனவே பாக்ஸ்கான்-க்கு சொந்தமான நிலத்தில் கட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாக்ஸ்கான் இந்தியாவில் தற்போது சென்னை, பெங்களூரில் பெரிய அளவிலான விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது, இதில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் மிகப்பெரிய கட்டமைப்புகளுக்கான முதலீட்டையும், ஒப்புதல்களையும் சமீபத்தில் தான் கர்நாடக அரசு கொடுத்து இங்கு எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கான தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது 1200 கோடி ரூபாயில் புதிய தொழிற்சாலையைத் தனது சொந்தமான நிலத்தில் கட்டமைக்கப்படும் எனப் பாக்ஸ்கான் தெரிவித்துள்ள வேளையில், இப்புதிய தொழிற்சாலை சென்னையில் கட்டப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. பாக்ஸ்கான் தரப்பில் இப்புதிய தொழிற்சாலை எங்கு அமைக்கப்படுகிறது என்பதை வெளியிடவில்லை.

நவம்பர் 2023ல் ஆப்பிள் தயாரிப்புகளுக்குத் தேவையான கட்டமைப்பை மேம்படுத்த 1.5 பில்லியன் டாலர் நிதியை செலவு செய்வதாக அறிவித்து இருந்தது. இந்த முதலீடு பாக்ஸ்கான் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஹான் ஹாய் டெக்னாலஜி இந்தியா மெகா டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தின் வாயிலாகச் செய்யப்பட்டது.

தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் தனது உற்புத்தி கட்டமைப்பை பல பிரிவில், பல இடத்தில் மேம்படுத்தி வருகிறது. இதன் வளர்ச்சி பாதையில் மிகவும் முக்கியமாக ஹெச்சிஎல் குரூப் உடன் இணைந்து இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் பேகேஜிங் மற்றும் டெஸ்டிங் கட்டமைப்பை உருவாக்குவது தான். இதற்காகப் புதிய கூட்டணி உருவாக்கி முதல் கட்டமாக 37.2 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *