பலூன் விக்கற பொண்ணுக்கு காச அள்ளி குடுத்துட்டு போயிருக்காரு! செல்ஃபி கூட எடுக்க விடாதவங்கலாம் இத கத்துக்கணும்!

சமூக வலை தளங்களில் அனிமல் திரைப்படம் (Animal Movie) ஏற்படுத்திய தாக்கம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த திரைப்படத்தில், பாபி தியோல் (Bobby Deol) மது பானத்தை வைத்து கொண்டு ஆட்டம் போடும் வைரல் வீடியோக்கள் (Viral Videos) சமூக வலை தளங்களில் இன்னமும் வலம் வந்து கொண்டுள்ளன.

அனிமல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரி குவித்தது. இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), அனில் கபூர் (Anil Kapoor) மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) என பலர் நடித்திருந்தாலும், பாபி தியோல்தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார்.

இந்த சூழலில் பாபி தியோலின் மற்றொரு வைரல் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவின் தொடக்கத்தில் விமான நிலையம் ஒன்றில் இருந்து பாபி தியோல் வெளியில் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்க, பாபி தியோல் மறுக்காமல் ஒப்பு கொள்கிறார்.

நிறைய ரசிகர்கள் சூழந்த போதிலும் கூட, முகம் சுழிக்காமல் அவர்களின் ஆசையை பாபி தியோல் நிறைவேற்றுகிறார். இதற்கு அடுத்தபடியாக அவர் காரில் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது பலூன்களை விற்பனை செய்யும் பெண் தெரு வியாபாரி ஒருவருக்கு, பாபி தியோல் பணம் கொடுப்பதை நாம் காணலாம்.

அத்துடன் தலைக்கனம் எதுவும் இல்லாமல் அவருடன் பாபி தியோல் கை குலுக்கவும் செய்கிறார். இந்த 2 சம்பவங்களும் பாபி தியோலின் நல்ல குணத்தை காட்டுவதாக உள்ளன. எனவே சமூக வலை தளங்களில் பாபி தியோலின் ரசிகர்கள் இந்த வீடியோவை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வைரல் வீடியோவில், பாபி தியோல் பயன்படுத்தியிருப்பது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 1.69 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.80 கோடி ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் இதில் எந்த வேரியண்ட்டை பாபி தியோல் வைத்துள்ளார்? என்பது தெரியவில்லை. எனினும் இந்த கார் தவிர, மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes-Benz S-Class), போர்ஷே கரீரா (Porsche Carrera) மற்றும் லம்போர்கினி முர்சிலகோ (Lamborghini Murcielago) போன்ற கார்களும் பாபி தியோலிடம் உள்ளன.

இதில், போர்ஷே கரீரா காரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாபி தியோல் வந்ததை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம். மறுபக்கம் லம்போர்கினி முர்சிலகோ காரை பாபி தியோலின் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தியதையும் கடந்த காலங்களில் நம்மால் பார்க்க முடிந்துள்ளது. பாபி தியோலிடம் உள்ள அனைத்துமே பெரும் செல்வந்தர்களுக்கு விருப்பமான கார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *