பணிநீக்கங்கள் அறிவித்த பேடிஎம்..! அதிர்ச்சியில் ஊழியர்கள்!
இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான பேடிஎம் வங்கி நிறுவனத்தின் முறைகேடான பரிமாற்றங்கள், விதிமுறையை முறையாக கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களால் அந்த நிறுவனத்திற்கு தடை விதித்தது.
அதன் எதிரொலியாக பேடிஎம்ன் தாய் நிறுவனம் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பிப்ரவரில் பேடிஎம் நிறுவனரான விஜய் சேகர் சர்மா பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதில்லை என உறுதியளித்திருந்தார். ஆனால் அவரே ஒரு கட்டத்தில் பேடிஎம் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார். அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்குறைப்புகள் வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேடிஎம் நிறுவனத்தில் தற்போது நடக்கும் பணிநீக்க நடவடிக்கை ஆண்டுதோறும் நடைபெறும் செயல்பாட்டு மதிப்பீட்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பர்பாமென்ஸ் ரிவ்யூவ்-ன் ஒரு பகுதியாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.பணியாளர் குறைப்பு எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், கடந்த இரண்டு வாரங்களில் சில துறைகளில் 20 சதவீதம் பணியாளர்கள் வரையில் குறைக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேடிஎம் நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கை இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அதிகப்படியான ஊழியர்களை PIP-யில் அமரவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இதனால் அடுத்த சில மாதத்தில் கூடுதலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளது.பேடிஎம் நிறுவனத்தில் டிசம்பர் 2023ல் சுமார் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய பணிநீக்கம் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.