Paytm: பேடிஎம்-க்கு விதித்த கட்டுப்பாடுகள்! ஃபாஸ்டேக்கை பயன்படுத்த முடியுமா? முடியாதா? – ஆர்பிஐ சொன்னது என்ன?

இந்தியாவின் மிகப்பெரிய நிதி பரிமாற்ற தளமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

பேடிஎம் வங்கி விதிமுறைகளி மீறி பணப் பரிமாற்றம் செய்தது என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பேடிஎம் வங்கிக்கு உத்தரவிட்ட ஆர்பிஐ:

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை பேடிஎம் பேபெண்ட்ஸ் வங்கியிடம் விசாரணையை நடத்தி வருகிறது. அதே நேரத்தில், பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பேடிஎம் வாலெட், பேடிஎம் டேக், பேடிஎம் என்எம்டிசி கார்டுகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது என்பதால் வாடிக்கையாளர்கள் வேறு தளங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதியுடன் பேடிஎம் வங்கி சேவையை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

ஃடேக்கை பயன்படுத்த முடியுமா?

இந்த நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட வங்களில் டேக் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் அங்கீகரிப்பட்ட 32 வங்கிகளின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *